வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா. திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகியப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.

மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படதிற்காக பாடல் ஒன்றை கவிப்பேரரசு எழுதி உள்ளார். அந்த பாடல் என்ன என்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு..
இதையும் படிங்க: Run it Up ... மீண்டும் கலக்கும் Hanumankind..!
பல்லவி:
"மாவீரா மாவீரா
வாவா வீரா மாவீரா!
நதியில் குளித்தது போதும்
இனிமேல்
குருதியில் குளித்து வா வா
பொடிநடை போட்டது போதும்
இனிமேல்
புலிநடை போட்டு வா வா
ஆதித் தமிழின்
அடையாளமே வா
ஆதிக்கம் அழிக்கும்
படையாழமே வா
ஆதவனை உன்
இடுப்பில் கட்டு
ஆயிரம் யானையைக்
கால்களில் கட்டு
காக்கும் கடவுள் அம்சம் நீதான்
வன்னிக் காட்டின் வம்சம் நீதான்
ஆயிரம் கோயில் ஆராதிக்கும்
அய்யனாருமே நீயேதான்
எரிமலை பொடிபட
எதிரிகள் அடிபட
கோழைகள் வழிவிட
ஏழைகள் வழிபட
எழுந்த மாவீரன் நீயேதான்
சரணம்:
உயிரைப் பிரிவது
மட்டுமா சாவு?
ஊரைப் பிரிவதும்
சாவுதானடா!
மண்ணகம் எல்லாம்
மண்ணகம் அல்ல
மானம் வீரம் வாழ்வுதானடா
தமிழன் யார்க்கும் சோறு கொடுப்பான்
மண்ணைத் தொட்டால்
திருப்பி அடிப்பான்
வீரத் தமிழன் மானத் தமிழன்
மூன்று இடத்தில் திருப்பி அடித்தான்
ஒருகாடு எங்கள் சந்தனக்காடு
மறுகாடு இந்த முந்திரிக்காடு
எல்லாவற்றிலும் மேலாய் இருப்பது எங்கள் எங்கள் வன்னிக்காடு
மாவீரா மாவீரா
வா வா வீரா மாவீரா!

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆடுகளம் நரேன், பாகுபலி பிரபாகர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுளள்தாக வ.கௌதமன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நான் வெயிட் லாஸ் பண்ண காரணம் இந்த ஹீரோயின் தான்...! 3 மாதத்தில் நடந்த அதிசயம்..! நடிகை ஜோதிகா பேச்சு..!