எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சீன தயாரிப்பான ட்ரோனை பறக்கவிட்டு வீடியோ எடுத்து இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக வழக்கறிஞரும், மூத்த அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர், 'ராகுல் கேவலமான செயல் ஒன்றை செய்துவிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நடமாடி கொண்டிருக்கிறார். உலக அரங்கில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கியிருக்கும் அவரின் செயலை கண்டிக்காமல் இங்கே ஹிந்தி ராகம் பாடி கொண்டிருக்கின்றன இந்த கேடு கெட்ட திராவிட கூட்டம்.
விஷயம் இதுதான்... இந்தியாவில் ட்ரோன் உற்பத்தியில் உலக சந்தையில் முன்னணி இடம் வகித்து வருகிறது. சுமார் 400 கம்பெனிகள் இந்த ட்ரோன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. ட்ரோன் உற்பத்தி மட்டுமல்ல, அதை தயாரிக்க தேவைப்படும் உதிரி பாகங்களும் பெருமளவில் தயார் செய்யப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: மோடியை வீழ்த்த ராகுல் சதி..! ட்ரம்ப் வெளியிட்ட பகீர் ரகசியம்… கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்..!

ட்ரோன்கள் இன்றைய நவீன யுகத்தில் எல்லா துறைகளிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ராணுவத்தில் அவை தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. உளவு பார்த்தல் முதல், மிக சிறிய அளவில் வெடி மருந்துகள், அத்தியாவசிய மருந்து, உணவு போன்ற பொருட்களை ஆட்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு அனாயசமாக எடுத்து செல்ல ட்ரோன்களே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
பல நாடுகள் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்களின் தரத்தை ஒப்பிடும் போது சைனா போன்ற நாடுகளின் ட்ரோன்கள் நம்பகத்தன்மையற்றதாக இருக்கின்றன. எனவே இந்திய ட்ரோன்களுக்கு உலக சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நாடும் கேட்கும் அளவுகளை கொடுக்க முடியாமல் திணறும் அளவிற்கு இந்தியாவின் ட்ரோன் வர்த்தகம் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 30% உற்பத்தி அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்றைய ட்ரோன் சந்தையின் வர்த்தக மதிப்பு 2 பில்லியன் டாலர். இந்த வர்த்தகம் இப்படியே விரிவடைந்தால் 2025 க்குள் இந்திய ட்ரோன் வர்த்தகம் 3 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய அசுர வளர்ச்சி என்று பொருளாதார வல்லுநர்கள் ஆச்சர்யம் விலகாமல் விழி உயர்த்துகிறார்கள்.

பொறுக்குமா இந்த கேடு கெட்ட கயவாளி கூட்டத்திற்கு..? எந்த ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவனும் உள் நாட்டிற்க்குள்தான் ஆளும்கட்சிக்கு எதிராக அரசியல் செய்வான். உலக நாடுகள் என்று வரும்போது அவர்கள் நாட்டை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள், அதே போல் யாரும் குறைத்து பேசினாலும் அதை அனுமதிக்கவும் மாட்டார்கள், அந்த அளவு தேசப்பற்று அவர்களிடம் இருக்கும்.
ஆனால் இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவின் வளர்ச்சியையும் சாதனைகளையும், பெருமைகளையும் வெளிநாடுகளில் சென்று அசிங்கமாக பேசுவதையே முழு நேர வேலையாக ஒரு மனிதன் செய்து கொண்டிருக்கிறான். இந்தியாவின் வணிகம், பங்கு சந்தை, ராணுவம், கலாச்சாரம் போன்றவற்றை எப்போதும் குறைத்து பேசி இந்தியாவை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி அதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமே அந்த மனிதனின் நோக்கம்.

இப்போது செய்திருப்பதும் அப்படி ஒரு கேடு கெட்ட செயல். இந்தியாவின் ட்ரோன்கள் நம்பகதன்மை கொண்டதாக இல்லை, தரமில்லை என்று குறைத்து மதிப்பிடும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்டுள்ளார். அதற்கு கையில் ஒரு ட்ரோன் ஒன்றை வைத்து பறக்க வைத்து காட்டுகிறார். அந்த ட்ரோன்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அது ஒரு சைனா உற்பத்தி ட்ரோன் .
அது சரி, அதை தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தால் ஏன் காங்கிரஸ் இந்த நிலைமையில் இருக்க போகிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான். விஷயம் அதுவல்ல, அந்த ட்ரோன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்ன தேவையின் பொருட்டும் அது இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. அது வெறும் சாதனமாக கூட இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. அந்த ட்ரோன் எப்படி இவருக்கு கிடைத்தது?
அது DJI என்னும் சீன தயாரிப்பு. 2022 ம் ஆண்டு முதலே அந்த வகை ட்ரோன் தடை செய்யப்பட்டு விட்டது. இப்போது ராகுல் பயன்படுத்தியிருப்பது அதன் லேட்டஸ்ட் மாடல் வகையை சேர்ந்தது. தேசிய பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு தடை செய்யப்பட்ட ஒன்று.
ஏனெனில் பாகிஸ்தான் எல்லையில் போதை பொருள் கடத்தல், வெடி மருந்து கடத்தல் போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. கடந்த ஆண்டு மட்டும் 226 ட்ரோன்கள் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன, சில கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ட்ரோன் ராகுல் கைக்கு வந்தது எப்படி? இது தேசத்தின் மிகப்பெரிய அதிர்ச்சி, தேசபிமானிகள் கலங்கி நிற்கின்றனர். இந்தியாவின் எதிர் கட்சி தலைவர் தேச விரோத, பாதுகாப்பின் பொருட்டு தடை செய்யப்பட்ட ஒரு சாதனத்தை வைத்து, அதுவும் இந்திய தயாரிப்பிற்கு எதிராக விளம்பரம் செய்வது நம் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அசிங்கம், அவமானம், தலைகுனிவு? 
அவமானம் செய்திருப்பது மோடியை அல்ல, இந்திய தொழில் நுட்பத்தை, அந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய பல்லாயிரம் இந்தியர்களின் அறிவையும், திறனையும். இது 140 கோடி இந்தியர்களையும் இழிவு படுத்தும் செயல் இல்லையா? கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்து உருவாக்கிய ஒரு சாதனையை ஒரே வீடியோவில் இழிவு செய்யும் இந்த மனிதன் தேசத்தின் அசிங்கம் இல்லையா?
இது நிச்சயம் ட்ரோன் வர்த்தகதில் பாதிப்பை உருவாக்கும். உள்நாட்டுகாரனே குறை சொல்லும் விதத்தில் விளம்பரம் செய்தால் பிற நாட்டு கம்பெனிகள் நம் ட்ரோன்களை வாங்க தயங்க மாட்டார்களா? ஒரு மனிதனுக்குள் இவ்வளவு வன்மமா? ஆட்சிக்கு வர எந்த எல்லைக்கும் செல்வார்களா? நாட்டை சீரழித்து அதன் தலைமையை பிடித்து என்ன சாதிக்க போகிறார்கள்?
ராகுலை பொறுத்த வரை இந்தியா ஒரு முட்டாள்களின் தேசம், அவர்களுக்கு அறிவில்லை, திறமையில்லை, பொருளாதாரம் இல்லை என்றால் எதுவுமே இல்லாத அந்த தேசத்தை ஆள துடிப்பது ஏன்?

ஆளும் கட்சி மீது கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் முரண்பாடுகள் இருந்தால் கட்சியை விமர்சனம் செய்யலாம். பிரதமரை விமர்சனம் செய்யலாம், அது என்ன இந்திய தொழில் நுட்பத்தை விமர்சனம் செய்வது? இது அறிவுள்ள ஒரு மனிதன் செய்யும் செயலா? இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது மட்டுமல்ல... இது சட்ட விதிமீறலுமாகும்.
மேற்படி ட்ரோன் முறையான அனுமதி பெற்று இந்தியாவில் பறக்கவிடப்படவில்லை. இதை பறக்க விடும் பைலட் லைசன்ஸ் ராகுலிடம் கிடையாது. அது மட்டுமல்ல அது பறக்க விடப்பட்ட பகுதி தேசத்தின் தலைநகரமான டெல்லியில்... அது முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட பகுதி.
இப்போது தேச நலனையும் தேச பாதுகாப்பையும் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் சட்ட விதிமீறல் செய்து இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த முயற்சி செய்துள்ள இந்த மனிதனை அரசு என்ன செய்ய போகிறது? இதற்கு இந்த மக்கள்தான் என்ன பாடம் புகட்ட போகிறார்கள்..?''எனக் கேள்வி எழுப்பியுள்ளார்
இதையும் படிங்க: பற்றி எரியும் மும்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம்.. வலியுறுத்திய ராகுல்..!