கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அவரது இல்லத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை, செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். 2016-2022 சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து ,762 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகவும், (வருமானத்துக்கு அதிகமாக 71.19தவிகிதம்) அசையும் மற்றும் அசையா வாங்கப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அப்பா வேஷம் போடும் திமுகவினர்... 2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.!
அதனடிப்படையில் இந்த சோதனை இன்று காலை 6.30 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சோதனை மேற்கொண்டு வரக்கூடிய அம்மன் அர்ஜுனன் வீட்டில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என குவிய தொடங்கியுள்ளனர். அதேபோல அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர் .
இதையும் படிங்க: 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி... யார் ஓநாய்? நல்ல வாயா உங்கள் வாய்? - எடப்பாடி மீது பாய்ந்த ஓபிஎஸ்