உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டிலேயே முடங்கிக்கிடந்த இருண்ட காலம் நீங்கி தற்போது ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை பார்ப்போம்.
1. தி கிரேட் இந்தியன் கிட்சன்
ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணிக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தில், ஒரு பெண் திருமணத்தால் சிக்கிக்கொள்கிறார்கள். சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, கணவனின் ஆசையை நிறைவேற்றுவது அவளின் வேலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னை அடிமையாக்கும் கணவன் மற்றும் பெற்றோர்களை விட்டு வெளியேறி தனது கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணின் கதை தான் 'தி க்ரேட் இண்டியன் கிட்சன்'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களை வறுத்தெடுக்கும் நடிகைகள்... ஜோதிகாவை தொடர்ந்து ரம்யாவும் குற்றச்சாட்டு..!
2. க/பெ ரணசிங்கம்
வெளிநாட்டில் வேலைக்கு சென்று இறந்து போன கணவரின் உடலை சொந்த ஊருக்கு போராடி வரும் கிராமத்து பெண்ணின் போராட்டத்தை குறிக்கும் படம் க/பெ ரணசிங்கம். ஏழை பெண் எப்படி வஞ்சிக்கப்படுகிறார் என்பதே படத்தின் கதைக்களம். இதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பார்.

3. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
திருமணத்துக்கு பின்னர் பெண்களின் ஆசையை, லட்சியத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆண்களுக்கு மத்தியில் தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். ஆண் ஆதிக்கத்தை, பெண்களின் மீதான பார்வையை மாற்ற வேண்டும் என இந்த படம் ஆந்தாலஜி படமாக எடுக்கப்பட்டுள்ளது.
4. மிக மிக அவசரம்
பெண் காவல்துறையினர் அதிலும் குறிப்பாம கடைநிலை பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எதார்த்தமாக கூறும் படம் மிக மிக அவசரம். உயர் அதிகாரிகளின் பழிவாங்கலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும்.

5. கனா
கிராமத்து பெண்ணின் கிரிக்கெட் கனவு, ஆணாதிக்கம், அரசியல் சூழ்ச்சி, புறக்கணிப்பு ஆகியவைகளை எதிர்கொண்டு சாதிக்கும் பெண்ணின் கதையே கனா.
6. அறம்
மாவட்ட கலெக்டருக்கு வரும் சிக்கல், ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் போராட்டம், முடிவு எடுக்க முடியாமல் அரசியல் அழுத்தம் ஆகியவற்றை கூறும் படம் அறம்..இதில் நயன்தாரா நடித்திருப்பார்.
இதையும் படிங்க: மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...!