கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது. இதற்கு சலிப்பே இல்லாமல் அஜித் ரசிகர்களும் விடாமுயற்சி படத்தை வரவேற்கும் விதமாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் திரையரங்குகள் ஆட்டம் பாட்டம் என திருவிழாவை போல் களைகட்டியது.
த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசை, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் திரையரங்குகளில் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது என்றே சொல்லலாம்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அஜித்தின் படம் ஏதும் வெளிவராததால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு விடா முயற்சி திரைப்படம் பெரும் விருந்தாகவே அமைந்தது.
இதையும் படிங்க: விடாமுயற்சியோடு உயிர் காக்கும் சேவை... ஒன்றிணைந்த தல - தளபதி ஃபேன்ஸ்!
இந்நிலையில் தான் இந்த ஆண்டு பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ளது. நேற்று இரவு முதலே பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள் கட்ட அவுட்டுக்கு பால் பாலாபிஷேகம் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி வந்தனர்.
இவ்வாறு பெரிய நடிகர்களின் படம் வரும்போது ஏதேனும் கிசுகிசுக்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றே. சலிப்பு தட்டாத வகையில், சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் விடாமுயற்சி படம் பார்க்கச் சென்ற ரசிகர்களை போக்குவரத்து போலீசார் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர்.
அதாவது படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு முன்பாகவே தங்களது இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளனர். No Parking இடத்தில் நிறுத்தி இருந்த அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் போக்குவரத்து போலீசார் ஆன்லைன் செலான் மூலம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு குறுஞ்செய்தி சொல்லவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்திற்கு வெறித்தன வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!