தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உடைய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்காதது பொறுப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆடியோ லீக்... களத்தில் குதித்த விஜய்... வசமாக சிக்கிய புஸ்ஸி ஆனந்த்... ஜான் ஆரோக்கிய சாமியை சந்திக்க மறுப்பு..
ஆப்சென்ட் ஆன விஜய்:
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமி பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தமிழ்நாடு அரசியல் விஜய் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி தொண்டர்கள் விஜய்க்கு பதிலாக புஸ்ஸி ஆனந்தைக் கொண்டாடுவதாகவும், இப்படியே போனால் தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகளைக் கூட வாங்காது” என்றும் ஜான் ஆரோக்கியசாமி பேசியிருந்தார்.

இது தமிழக வெற்றிக் கழகத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், இன்று மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தவெக கட்சி தலைவர் விஜய் பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை. சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் விஜய் 69 படப்பிடிப்பில் அவர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னிலை விளக்கம் தரவுள்ள புஸ்ஸி ஆனந்த்:
இந்த கூட்டமானது தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது அது புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு விளக்கம் சொல்லும் கூட்டமாக மாறியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக்கான விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தன்னிலை விளக்கம் கொடுக்கவுள்ளாராம்.

மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு மட்டுமே கட்டுப்படும், அவர் சொல்லும் உத்தரவுகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்கவுள்ளாராம். இதனால் தான் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீ இப்படியே போனால் கட்சி நிலைக்காது...விஜய்யை கண்டித்த எஸ்.ஏ.சி?