தவெக தலைவர் விஜய்க்கு மார்ச் 14,-ஆம் தேதி மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள முக்கியஸ்தர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குவது வழக்கமான நடைமுறை. அந்த வகையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தமிழக அரசியல் களத்திலும் பேசுபொருளானது. விஜய் பாஜகவின் பி டீம் என்று திமுகவில் சிலர் விமர்சித்தனர். விஜய்யின் நகர்வுகளை வேவு பார்க்கும் மத்திய அரசின் முயற்சி என்றும் விசிக விமர்சித்தது. என்றாலும் இந்தப் பாதுகாப்பை ஏற்க விஜய் முன் வருவாரா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில்
மார்ச் 14-ஆம் தேதி முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: மார்ச்.14க்கு அப்புறம் விஜய்யை நெருங்கவே முடியாது… ஏன் தெரியுமா?

இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். விஜய் சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றை திட்டமிட்டிருக்கும் நிலையில், கமாண்டோக்கள் விஜயுடன் பாதுகாப்பு செல்வார்கள். ஏற்கனவே விஜய்யின் வீடு, கட்சி அலுவலகத்தில் கமாண்டோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்க உங்களுக்கு ஹெட் மாஸ்டர் டா..! நாதக vs தவெக… வைரலாகும் போட்டோஸ்..!