விசிக தலைவர் திருமாவளவன் ரமலான் நோன்பு மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். தற்போது ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் மேற்கொண்டுள்ள நிலையில் திருமாவளவன் நோன்புத் தொடங்கினார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், ”இன்று முதல் நாள் ரமலான் நோன்பு! இவ்வாண்டு (2025) 21வது ஆண்டாக வழக்கம் போல ஐந்து நாட்கள் ரமலான் நோன்பு இன்று முதல் மேற்கொள்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசுலாமிய சான்றோர்களான உலமாக்களுடன் இன்று அதிகாலை சென்னை அபு பேலஸ் விடுதியில் நடைபெற்ற சகர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை மதுரையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் இந்நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
மேலும் இன்னொரு எக்ஸ் பதிவில், "எனதருமை இசுலாமிய பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மார்ச் திங்கள் 3ஆம் நாள் முதல் 7 ஆம் நாள் வரையில் சகர் மற்றும் இப்தார் ஆகியவற்றில் உங்களோடு இணைந்து பங்கேற்கிறேன்!" என்றும் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அடி பலமா இருக்கும்..! விசிக இல்லாமல் அரசியல் நகர்வே இல்லை: திருமா கர்வம்..!