கடந்த இரு தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,065 ரூபாய்க்கும், சவரன் 64,520 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (06/03/2024):
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 020 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: இப்ப தொடு பார்க்கலாம்... மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை... இன்றும் கிடுகிடு உயர்வு...!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 49 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 749 ரூபாய்க்கும், சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து 108 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?

கனடாவும் சீனாவும் அமெரிக்கா மீது வரிகளை விதித்து முதலீட்டாளர்களை பாதுகாப்பான பொருளாதாரம் மீது கவனம் செலுத்த வைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மீது திரும்பியுள்ளது. மற்றொருபுறம் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு மற்றும் வேலையின்மை போன்ற அமெரிக்க தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்துக்கொண்டிருப்பதும் தங்கம் மீதான முதலீட்டை சற்றே குறைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி..! 300 நாட்களில் ரூ.1 லட்சத்தைத் தாண்டப்போகும் தங்கத்தின் விலை..!