சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 280க்கும் விற்பனையாகி வருகிறது.
வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தங்கத்தின் விலை 64 ஆயிரத்தை எகிறித் தொட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (19/02/2024):
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 035 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: தொட்டாலே ஷாக் அடிக்குமோ?... தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை...!
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 71 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 694 ரூபாய்க்கும், சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை:

தங்கத்தை போல் அல்லாமல் தொடர்ந்து 6வது நாளாக வெள்ளி விலை மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. வெள்ளி விலை கிராம் 108 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கூட ஓரிரு நாட்களில் விலை குறையும் என காத்திருந்தால் தொடர்ந்து விலையேறி ஷாக் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு ஷாக்... இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை...!