இன்று காலை, மாலை என இரண்டு வேளையும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,440 உயர்ந்துள்ளது.
இன்று காலையில் கிராமிற்கு 110 ரூபாய் உயர்ந்து 8,230 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 880 ரூபாய் உயர்ந்து 65,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நிலவரம் (14/03/2024):
இன்றைய மாலை நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 8,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: அய்யய்யோ...! அலற வைக்கும் தங்கம் விலை... இனியும் கனவிலும் நகை வாங்க முடியாது போலயே...!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 120 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 978 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைப் அல்லாமல் வெள்ளி விலை காலை நிலவரப்படியே நீடித்து சற்றே ஆறுதல் கொடுத்துள்ளது. வெள்ளி ஒரு கிராம்112 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1000 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், போர் பற்றிய கவலைகளும் முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் மீதான விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது.
இதையும் படிங்க: இப்பவே கண்ண கட்டுதே... தலை சுற்ற வைத்த தங்கம் விலை...!