இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
புத்தாண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் நேற்று கணிசமான அளவு குறைந்த தங்கம் விலை ஒரே நாளில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 105 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கும், சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து 62 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: Gold Rate In Chennai: ஒரே நாளில் இவ்வளவு சரிவா? - சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை!

அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 115 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து 68 ஆயிரம் 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:

தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயரக் காரணம் என்ன?

அமெரிக்க அரசாங்கத்தின் கட்டணக் கொள்கைகள், குறிப்பாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீதானவை, பணவீக்கமாகக் கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பாக மாற்றுகிறார்கள். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை உயர மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாரத்தின் கடைசி நாளில் இப்படியா?... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை!