பொதுவாகவே ஹோட்டல் மற்றும் கல்யாண வீடு சாப்பாடுகளில் பரிமாறப்படும் உணவுகள் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். நாம் என்ன தான் வீட்டில் வந்து அதே போன்று செய்ய முற்பட்டாலும் வேற வழியில்லாமல் என்ன வந்ததோ அதை வைத்து திருப்தி அடைந்து கொள்வோம். அதிலும் முக்கியமாக வத்தக்குழம்புக்கு முயற்சி செய்து எத்தனையோ பேர் தோற்று போயிருப்பார்கள். ஆனால் இது போன்று எளிய முறையில் செய்தால் பத்து ஊரு மனக்கும் அளவுக்கு வாசனையாக இருப்பதோடு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட அழைக்கும். மேலும் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

வத்தக் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் ;
சின்ன வெங்காயம் பாதியாக நறுக்கியது - 15
பூண்டு - 15 பல்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
மன தக்காளி வத்தல் - 2 தேக்கரண்டி
சுண்டைக்காய் வத்தல் - 1 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 1
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

வறுத்து அரைக்க ;
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
வரமிளகாய் - 10
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சரிசி - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வரமிளகாய், கொத்தமல்லி சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம் சேர்த்து கருகி விடாமல் வறுத்த பின்பு அதனுடன் கருவேப்பிலை சேர்த்து வறுத்து பின்பு மஞ்சள் போடி சேர்த்து இறக்கி ஆரிய பின் அரைத்து, இந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: ஏழை மக்கள் வாங்கக் கூடிய விலையில்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஆட்டோ அறிமுகம்! விலை எவ்ளோ?

பிறகு அரை மூடி தேங்காயை துருவி, சோம்பு சிறிதளவு சேர்த்து ஒரு விழுதாக நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது, வெறும் வாணலியில் நெல்லெண்ணய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொறிய விடவும். அதன் பின் காய்ந்த மிளகாய் வற்றல் 5, மணத்தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல் சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின்பு தக்காளியை சேர்க்கவும். இது நன்றாக வதங்கி எண்ணெய் பிரியும் சமயத்தில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறிய பின் தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இது ஒட்டாத பதம் வரும் வரை வேக விடவும், இதில் ஊற வைத்த புளியை வடிகட்டி சாறு எடுத்து ஊற்றி நன்றாக கிளறி கொதிக்கவிடவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருந்து கிளறி இறக்கி விடவும். இப்போ கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெடி.
இந்த மாதிரி வத்தக்குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், சுவை சும்மா அள்ளும்.
இதையும் படிங்க: உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் வேண்டுமா? இந்த முறை பூஜை அதற்கு வழி கொடுக்கும்