இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அதானி குழுமம் தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய தொகையை வருமான வரியாக செலுத்தியிருக்கிறது.
2023 24 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 58,104.4 கோடி வரிகள் மற்றும் பிற பங்களிப்புகளை அரசு கருவூலத்திற்கு செலுத்தி உள்ளதாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டில் செலுத்தப்பட்ட ரூ 46,610.2 கோடி இருந்து சுமார் 12000 கோடி ரூபாய் அதிகமாகும்.
இதையும் படிங்க: ரூ.15,000 ஆட்டைய போட்டாங்க..! அலரும் மிர்ச்சி செந்தில்.. தெறிக்கும் சைபர் மோசடி..!
இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை கணக்கு மறைக்காமல் வெளிப்படைத்தன்மையோடு சிறந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கான பெருமையை அதானி நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கும் கௌதம் அதானி அதனுடைய குழுமத்தின் உலகளாவிய வரி கடமைகள் நேரடி வரிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வரிகளை அனைத்தும் சேர்த்து இந்த தொகை செலுத்தப்பட்டது.

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக்ஸ் ஜோன் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி எனர்ஜி சொலுஷன் லிமிடெட், அதானி பவர் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய ஏழு முக்கிய நிறுவனங்களின் பங்களிப்புகளை உள்ளடக்கியது இந்த வரி விகிதம்,என்டிடிவி ஏசிசி மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் போன்ற துணை நிறுவனங்களின் கூடுதல் பங்களிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறும்போது, வரி செலுத்துவதின் முக்கியத்துவத்தையும் வெளிப்படை தன்மையும் வலியுறுத்தினார். நமது நாட்டின் வளர்ச்சிக்கும், நிதிக்கும் நாம் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒருமைப்பாடு மற்றும் நல்லாட்சிக்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அதானி கூறினார்.

அதானி குழுமத்தின் செயல்பாட்டு அளவு பரந்து விரிந்த பல துறைமுகங்கள், மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சிமெண்ட் உற்பத்திக்கு இது ஒரு சான்றாக உள்ளது என்று தொழில் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேசிய கருவூலத்தை பொருத்தவரை அதானி குழுமம் மிக முக்கியமான பங்களிப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
பல சர்ச்சைகள் இருந்த போதிலும் அதனுடைய பின்னடைவு மற்றும் பொருளாதாரப் பொறுப்புணர்வு பற்றிய விஷயங்களை இது வலுப்படுத்துகிறது. அதானி குழுமம் பல பின்னடைவுகளை சந்தித்து இருந்தாலும் தொடர்ந்து பல விரிவாக்கங்களை செய்து வருவதால் அதன் நிதி வெளிப்படை தன்மை முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக அமைந்துள்ளது.

2023 24 ஆம் ஆண்டில் அதானி குழுமம் செலுத்தியுள்ள வரி 58,14.4 கோடி ஆகும் இந்தத் தொகை ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்களை மிகப்பெரிய வித்தியாசத்தில் மிஞ்சிய தொகையாகும். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வரி வசூல் ஒன்பது புள்ளி 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது இதில் அதானி குழுமத்தின் பங்கு மட்டும் சுமார் 6% ஆகும்
இந்திய சரித்திரத்தில் 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒரு நிறுவனத்தின் சார்பில் வரி செலுத்துவது என்பது இதுவே முதன் முறையாகும்.
இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!