அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகியை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளிவாள் வழங்கப்பட்டது. மேலும் பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர். அப்போது வரிசையில் முந்திக் கொண்டு விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஅர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார்.

இதையும் படிங்க: "துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்"... செங்கோட்டையனின் ஆவேச கருத்தால் அதிமுகவில் சலசலப்பு.!
வரிசையில் வராமல் முந்திக் கொண்டு வந்தார். அவரை கே.டி.ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். மேலும் “எதற்காக இப்படி வந்த?” என்று அவரை ராஜேந்திர பாலாஜி அதட்டினார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக
பொதுக் கூட்டத்தில் நிர்வாகியை முன்னாள் அமைச்சர் அறைந்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நோக்கி அதிமுக நிர்வாகி ஒருவர் கேள்வி கேட்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்த போது கீழே இருந்த தொண்டர் ஒருவர் கேள்வி கேட்டார். அதனால் கோபமாக திண்டுக்கல் சீனிவாசன், ’மடையா, முட்டா பயலே, அறிவுகெட்டவனே,கீழ உட்கார்ந்து கேள்வி கேட்டா நான் பதில் சொல்லனுமா?” என அந்த தொண்டரை தரக்குறைவாக ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
இதையும் படிங்க: அந்த மனுசனுக்கு நாக்குனு ஒண்ணு இருக்கா..? எடப்பாடியாரை குறி வைத்து குதறும் திமுக அமைச்சர்..!