கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள்வைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவோடு கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். உடனே, தமிழகத்தில் 2026 தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா, எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதற்கிடையே மார்ச் 28ஆம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்தச் சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாதையைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 6 அன்று ராமேஸ்வரம் வருகிறார். டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மோடி மதுரை வரும்போது, விமான நிலையத்தில் அவரை சந்தித்து பேச அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளது.? சந்தேகம் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி.!!

சந்திப்புக்காக பழனிச்சாமி கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எனவும், அனுமதி பெற பழனிசாமி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்!