தமிழக மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்னை போயஸ்கார்டனில் செய்தியார்களை சந்தித்த வி.கே சசிகலா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் பெயரை எஃப்ஐஆரில் கூட நேரடியாகப் போடக் கூடாது, பத்திரிகையாளர்களுக்கு கூட தெரியக் கூடாது. ஆனால், மாணவி தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய எஃப்ஐர் வெளிவந்துள்ளது. எஃப்ஐஆர் லீக் ஆகும் அளவுக்கு தமிழக அரசின் நிர்வாகம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார் .

இதுதான் திராவிட ஆட்சி என்று மேடைக்கு மேடைக்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் பிரச்னை அங்கு துணைவேந்தர் இல்லாமல் இருப்பது தான். இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது, முடிவெடுப்பது என்பது தெரியாமல் உள்ளது.தமிழகத்தில் இதேபோல ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக முதலமைச்சர் துணை வேந்தர் நியமனத்தை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் .

தமிழக முதல்வர் ஏன் ஆமை வேகத்தில் செயல்படுகிறார் என்பது தெரியவில்லை. இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் நடக்கிறதே வேறு என்றும் இந்த ஆண்டு அ.தி.மு.க. கட்சி ஒன்றிணையும் 2026 ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியை அமைப்பதே இலக்கு என்றும் சசிகலா சூளுரைத்துள்ளார் .
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உதவி...நேரில் சந்திக்க துடித்த விஜய்