தமிழகத்தையே அதிர வைத்துள்ள ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற சம்பவம் தற்போது பரபரப்பு கிளப்பி உள்ளது. திருப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பெண்கள் ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்துள்ளார். ரயில் திருப்பூரில் இருந்து ஜோலார்பேட்டையை கடக்கும்போது அந்தப் பெண்களுக்கான பெட்டியில் ஏறிய ஹேமராஜ் எனும் சைக்கோ நபர் அந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்து ஒரு கட்டத்தில் ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளார். பின்னர் அந்த பெண்ணை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கப்பட்டு ஹேம்ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஹேமராஜ். 30 வயதான இவர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அருகே உள்ள கீழ் ஆலத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவன் ஆவான். இந்த சைக்கோ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தக் கொடூர குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சைக்கோ நபரான ஹேமராஜ் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றச்சம்பவம் மட்டும் ஹேமராஜ் செய்யவில்லை இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு இதேபோன்று வேலூர் கண்டோன்மெண்ட் பகுதியில் பெண்கள் மட்டும் செல்லும் ரயில் பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு இளம் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து அவரையும் கீழே தள்ளி விட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் ஹேமராஜ் கைது செய்து சிறையில் அடைத்து குண்டர் சட்டமும் போடப்பட்டு 11 மாதம் சிறையில் இருந்து உள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த பெண்ணை தனியாக வரவழைத்து கொலை செய்ததாக ஹேமராஜ் கைது செய்யப்பட்டு குடியாத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கிலும் குண்டர் சட்டம் போடப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது கோவை திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயில் பெட்டியில் பெண்கள் பெட்டியில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிறுத்தத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அடித்து கையை உடைத்து கீழே தள்ளி உள்ளான்.

இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்படும் 11 மாதத்தில் ஒரு முறையும் 3 மாதத்தில் ஒரு முறையும் ஹேமராஜ் வெளியே வந்து ஜாலியாக உலா வந்துள்ளான் என்ற செய்தி கேட்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஜோலார்பேட்டை போன்ற முக்கிய சந்திப்புகளில் ரயில்வே போலீசின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இனியாவது இந்த பாதுகாப்பு குறைய பாடுகள் களையப்படுமா? ரயில்வே பெட்டிகளில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சைக்கோ நபர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?
இதையும் படிங்க: தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு