தை அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தில் புனிதநீராட வருகை தந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பக்தர்களின் கூட்டநெரிசல் தாங்க முடியாமல் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் இந்தியாடுடே செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டநெரிசலில் சிக்கி காயமைடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து அதன் மீது ஏறி பக்தர்கள் செல்லும்போதுதான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீஸார் இறக்கப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகா கும்பமேளா நடக்கும்போது இதுபோன்று கூட்ட நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள், பக்தர்கள் காயமடைவதும் முன்பிருந்தே நடந்துள்ளது.
800 பேரை காவு வாங்கிய முதல் கும்பமேளா சுதந்திரத்துக்குப்பின் முதல்முறையாக கும்பமேளா 1954ம் ஆண்டு அலகாபாத்(இப்போது பிரயாக்ராஜ்) நடத்தப்பட்டது. வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக நடத்த முடிவு செய்யப்பட்டு, இறுதியில் சோகமாக முடிந்தது. 1954ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியும், நதியில் நீராடச்சென்று ஆற்றில் மூழ்கியும் 800 பேர் உயிரிழந்தனர்.

200 பேர் பலியான ஹரித்துவார் கும்பமேளா
1986ம் ஆண்டு ஹரித்துவாரில் கும்பமேளாநடந்தது.இந்த கும்மேளாவிலும் பக்தர்கள் கூட்டம் திடீரென அதிகரித்து ஏறக்குறைய 200 பக்தர்கள் உயிரிழந்தனர். அப்போது உ.பி. முதல்வராக வீர் பகதூர் சிங், ஹரித்துவார் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து பல எம்.பி.க்கலும், பல மாநில முதல்வர்களும் ஹரித்துவார் வந்திருந்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. பக்தர்கள், சமானிய மக்களை நதியில் குளிக்க பாதுகாப்புப்படையினர் அனுமதிக்காதபோது, கட்டுக்கடங்காத கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் கடும் கூட்டநெரிசல், தள்ளுமுள்ளு: உயிரிழப்புக்கு வாய்ப்பு, ஏராளமானோர் காயம்

2013ம் ஆண்டு கும்பமேளாவுக்கு வந்திருந்த பக்தர்கள் பிரயாக்ராஜ் ரயில்நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது திடீரென ரயில்வே மேம்பாலம் மக்களின் எடை தாங்காமல் இடிந்து விழுந்ததில் 42 பக்தர்கள் உயிரிழந்தனர், 45 பேர் காயமடைந்தனர்.
2025ம் ஆண்டு பிரயாக்ராஜ்ஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசல் தள்ளுமுள்ளுவால் ஏராளமான பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இந்துக்களை மட்டும் வெறுக்கிறது..?' கடுபேற்றிய கார்க்கே… கலங்கடிக்கும் பாஜக..!