இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியிலாலும் பாஜக டெல்லியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் ஒரே வரிசையில் மல்லுக்கு நின்றன.
தேர்தலில் வெற்றி பெற மூன்று கட்சிகளுமே தனித்தனியாக பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்திருந்தன. இந்நிலையில் இன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணி சிசோடியா ஆகியோரின் தோல்வி ஆம் ஆத்மி கட்சியைத் தாண்டி இந்திய கூட்டணியிலும் எதிரொலித்தது. இதனை அடுத்து இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அவர்களின் முடிவு குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்
இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா
அந்த வகையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆமாம் இந்திய கூட்டணியுடன் கைகோர்த்து இருந்தால் கண்டிப்பாக முறையில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், தற்போது அக்கட்சி தனது ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆட்சியை இழந்துள்ளதாக அவர் கடுமையாக சாடி உள்ளார்.

கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியதே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து ஆம் ஆத்மி கூட்டணியில் நீடத்திருந்தால், வெற்றி பெற்று இன்று ஆட்சியை அமைத்திருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் பாஜக-வின் ஆட்சி நாட்டிற்கே பெரும் ஆபத்து என்றும், விளைவுகளை அக்கட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ஆம் ஆத்மியே காரணம் என்று வார்த்தைகளை அள்ளி வீசிய மாணிக்கம் தாகூர், டெல்லி தேர்தல் முடிவுகளை பார்த்து இந்திய கூட்டணி கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை