டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவையில் எம்பிகளின் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார, பட்ஜெட் தொடர்பான இந்த கேள்வி பதில் நேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற நிர்மலா சீதாராமன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் என்றே சொல்லலாம்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது தமிழ்நாட்டுக்கு அல்வா மட்டுமே கொடுத்துள்ளது என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். முதலில் கேள்வி எழுப்பிய மாநிலங்களவை திமுக எம்பி திருச்சி சிவா, மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

அதே போன்று 100 நாள் வேலைத்திட்டம், சர்வ சிக்ஸ்யா அபியான் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை, பிரதம மந்திரி யோஜனா திட்டத்துக்கான தொகையும் மத்திய அரசு ஒழுங்காக கொடுக்கவில்லை இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அந்த இரு மாநகர மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தாவது சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கிரிப்டோ வணிகம் செய்பவர்களே உஷார்! புதிய வருமானவரி மசோதாவில் கிடுக்கிப்பிடி..
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் நான் சில விஷயங்களைப் பற்றி சொல்ல நினைத்தேன் அதை பிறகு சொல்கிறேன் ரூ 63246 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ திட்டம் இரண்டு கட்டப் பணிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது.இதில் 65 சதவீத நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது ஜனவரி 20,2019 இல் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 30000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஏற்கனவே மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது, என நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

பின்னர் குறுகிட்டு பேசிய திமுக எம்பிக்கள் திருச்சி சிவா,வில்சன், அப்துல்லா ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கூச்சல் எழுப்பினர். அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நான் இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன் நீங்கள் சுட்டிக் காட்டும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அவர்கள் எங்கே இருந்தார்கள் அந்த நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள் என பதில் கூறினார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு எதிர் குரல் எழுப்பிய திமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர்
இதனால் மிகவும் கடுப்பான நிர்மலா சீதாராமன் ஹேய்...HOLD ON என ஆங்கிலத்தில் ஆவேசமாக கத்தினார் இப்படி என்னை குறுக்கிட்டு பேச உங்களுக்கு உரிமை கிடையாது இதை நான் சொல்வேன் உங்களுக்கு பதிலாக சொல்கிறேன் இதை நீங்கள் அமைதியாகக் கேட்பது உங்கள் கடமையாகும்.

சம்பந்தம் இல்லாத விஷயங்களை நான் பேசுவதாக நீங்கள் கூறினால் நான் தமிழில் பேசுகிறேன் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது தமிழர்கள் தமிழர்களின் உணர்வோடு கூடிய அந்த ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டை மீண்டும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி தான் என கூறினார்.

இதுபோன்ற பல மக்களுக்கு ஒவ்வாத செயல்களை காங்கிரஸ் திமுக கூட்டணி அப்போது செய்தது என நிர்மலா சீதாராமன் ஆவேசத்தோடு கூறினார்.திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்தோடும் ஆக்ரோஷத்தோடும் ஒருமையில் பேசி பதில் அளித்தது சற்று நேரம் நாடாளுமன்ற அவையில் பரபரப்பை கூட்டியது
இதையும் படிங்க: அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .