பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோருக்கு பாட்னா சிவில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை. ஆகையால், அவர் சிறைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து பிகே கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களில், அவர் சிவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். ரூ.25,000 அபராதம் செலுத்தி பிகேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
‘‘இனி வரும் காலங்களில் இதுபோன்ற எந்த வேலையையும் செய்யக் கூடாது. இதனால் சாமானியர்கள் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்’’என்பது நீதிமன்றத்தின் நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை ஏற்றுக் கொள்ள பிகே தயாராக இல்லை. ஆகையால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்று அவரது வழக்கறிஞர் சிவானந்த் கிரி கூறுகிறார்.

இது குறித்து பிகேவின் வழக்கறிஞர் கூறுகையி, ‘‘போலீசார் பிரசாந்த் கிஷோரை இரவு கைது செய்தனர். அவருடைய ஜாமீன் மனுவை நாங்கள் தயார் செய்து செய்திருந்தோம். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் ரூ.25,000 ரொக்க ஜாமீன் செலுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற குற்றத்தை செய்ய மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நீதிமன்றம் விதித்தது.
இதையும் படிங்க: ‘பாஜக-வின் பி டீம்..?’ பிரசாந்த் கிஷோர் கொத்தாகத் தூக்கிச் சென்ற காவல்துறை..!
அதனை ஏற்றுக் கொண்டால் பிரசாந்த் கிஷோர் குற்றம் செய்துவிட்டார் என்று அர்த்தம். ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பது நமது அடிப்படை உரிமை. இந்த உத்தரவு எங்களால் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினோம். அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். நீதிமன்றம் மறுத்துவிட்டது. பத்திரத்தை செலுத்த மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆகையால் அவர் சிறைக்கு செல்ல நேரிடலாம்.
பிபிஎஸ்சி தேர்வுத் தாள் கசிவு சர்ச்சைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜன் சூரஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலை அவரை காந்தி மைதானத்தில் வைத்து கைது செய்த போலீசார், பின்னர் கைது செய்தனர். பிகே வலுக்கட்டாயமாக போராட்டம் நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டினர்.

பிரசாந்த் கிஷோர் கைது குறித்து பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர் சந்திரசேகர் சிங் கூறுகையில், ‘‘காந்தி மைதானத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் பிரசாந்த் கிஷோர் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது காந்தி மைதான காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இடத்தை காலி செய்ய நிறைய கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இருந்த போதிலும், அவரும் அவரது ஆதரவாளர்களும் தடை செய்யப்பட்ட பகுதியை விட்டு நகரவில்லை. அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரசாந்த் கிஷோருடன் 43 பேர் கைது செய்யப்பட்டனர். 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட பிறகு, 43 பேரில் 30 பேர் மாணவர்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது. அவர்களில் சிலர் தங்களை மாணவர்கள் என்று கூறுகின்றனர், அதை நாங்கள் இல்லை என உறுதிப்படுத்தி விட்டோம்’’ எனத் தெரிவித்தார்.
தேர்தல் வியூகரான இந்த பிரசாந்த் கிஷோர் தான் 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணிகளை வகுத்துக் கொடுத்தவர்.
இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!