கடலூா் மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை கடுமையாக விமா்சித்து செய்தியாளர்களிடம் பேசினார். இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தபெதிகவினர் நடத்தினர். புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து, அவா் மீது எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணா்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.இந்த நிலையில் பெரியார் பற்றி விமர்சனங்கள் வைப்பதை சீமான் தவிர்க்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்

மதுரையில் இருந்து விமானமூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்திருப்பதும், தங்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து பணியாற்றி வெற்றி பெற செய்வோம் என அவர் தெரிவித்தார். மேலும் பெரியார் பற்றி சீமான் விமர்சிப்பது ஏற்புடையதல்ல இந்த போக்கை சீமான் அவர்கள் தவிர்ப்பது அவருடைய அரசியலுக்கு நல்லது என்றும் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் பின்பத்தை உடைப்பதற்கு சிலர் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அல்லது துணை போகும் வகையில் சீமான் வாதம் அமைகிறது, அதுவும் ஆதாரம் இல்லாத விமர்சனங்களாக இருக்கின்றன இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?

தமிழுக்காகவும், தமிழருக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய சமூகநீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. பெரியாரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அதை ஒருபோதும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என திருமாவளவன் எச்சரித்துள்ளார்

இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !