இன்று நள்ளிரவில் 2024-ம் ஆண்டு முடிவடைந்து, 2025 ஆம் ஆண்டு உதயமாகிறது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான கோவாவிற்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் குவிந்து வருவதால் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவிலான பயணிகள் கோவாவிற்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் நேற்று இரவில் இருந்தே மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக ராய்காட் மாவட்டத்திலிருந்து அதிகமானவர்கள் செல்வதால் லோனர், மங்கோன், இந்தப்பூர், மும்பை அருகில் உள்ள பொய்நாட் பகுதியில் வாகன போக்குவரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ஆங்காங்கே சாலை கட்டுமான பணிகள் நடந்து வருவதால், வாகன போக்குவரத்துக்கு கூடுதல் தடையாக அமைந்து விட்டதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2025: புத்தாண்டு முதல் நாளில் இதெல்லாம் பார்த்தால், கேட்டால்... நீங்கள் பணக்காரர் ஆவதை தடுக்கவே முடியாது..!
உள்ளூர் போலீசார் உடன் இணைந்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: அப்பார்மெண்டில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. கண் கலங்க வைத்த கடைசி பதிவு