சென்னை கிண்டியில் நடைபெற்ற சிஐஐ தென்னிந்திய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம் உயர சிஐஐ ஆற்றும் பணியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

தமிழக அரசும், இந்திய தொழில் கூட்டமைப்பும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவதாகவும் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளதாகவும்,மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்துவமாக காணப்படுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு விழா நடத்தும் தமிழக அரசு... முதலமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்றும் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தெரிவித்தார்.மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு என்று கூறிய அவர், தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இந்தியாவின் உற்பத்தி மொத்த மதிப்புக் கூட்டலில் தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது என தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் தனித்தன்மை வாய்ந்த தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியாக மாற்ற இலக்கு இருப்பதாகவும் கூறினார்.

பொருளாதாரம் வளர்ச்சி மட்டுமல்ல அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி வளர்ச்சி, சமூக முன்னேற்றம் பெண்கள் வளர்ச்சி அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தங்கள் இலக்கு என தெரிவித்தார்.தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிக்கு மாநில மட்டுமல்ல தொழில் மயமாக்கப்பட்ட மாநிலம், தமிழ்நாடு முழுக்க சீரான வளர்ச்சியை கொண்டு வர தங்கள் எடுத்து வரும் முயற்சி நல்ல பலனை கொடுத்து வருவதாகவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஓசூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்துள்ளது என தெரிவித்தார்.
இதற்கு சான்றாக, இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 37.1 விழுக்காட்டுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகனை பறிகொடுத்த பாரதிராஜா..! நேரில் ஓடோடி சென்று ஆறுதல் சொன்ன முதல்வர்..!