முடக்குவாத நோய் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசிடம் உதவி கேட்டுள்ளார் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து'நாட்டுப்புற பாடகி செல்வி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தெட்சிணாபுரத்தில் வசித்து வருபவர் நாட்டுப்புறப் பாடகி செல்வி இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.இந்தப் பாடல் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமி குதிரை, அம்புலி, மத யானைக்கூட்டம், போராளி என சில படங்களில் பாடல் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் ஆதிக்கம் அதிகரிக்கவே சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் செல்விக்குக் கிடைக்கவில்லை இந்நிலையில்தான் தஞ்சை செல்வி தற்போது வறுமையில் வாடிவருவதாகவும் கடந்த 4 மாதங்களாக முடக்குவாத நோய் பாதிக்கப்பட்டு மூலையில் நடக்கக்கூட முடியாமல் முடங்கிக் கிடப்பதாகவும் அரசு தனக்கு உதவி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்
இதையும் படிங்க: 10.5% விட அதிகம் அனுபவிக்கும் வன்னியர்கள்... 15% ஆக உயர்த்தி திமுகவுக்கு நெருக்கடி... அன்புமணியை ஆட்டி வைக்கும் டேட்டா..!