வெள்ளை மாளிகை சந்திப்பில் டிரம்ப் ஜெலன்ஸ்கியை வறுத்து எடுத்த போது, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா தலையில் கை வைத்து அமர்ந்திருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூடான விவாதத்தின் போது ஒக்ஸானா மார்கரோவா கண்களை மூடிக்கொண்டு தனது தலையை வலது கைக்குக் கீழே தாழ்த்திய போது அவர் பக்கம் மைக்ரோஃபோன்கள் திரும்பின.நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே பதட்டமான வார்த்தை மோதல்கள் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா தனது தலையை கையில் சாய்த்துக் கொண்டு கலக்கமடைந்ததார்.

அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. வெள்ளை மாளிகையின் நேரடி பத்திரிகையாளர் சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடன் போர்நிறுத்தத்தை மறுப்பது ஏன் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை அழுத்தத்தைத் தூண்டினார்.
இதையும் படிங்க: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் உட்கார வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்த டிரம்ப்..! கடும் வாக்குவாதம்
உலகம் முழுவதிலுமிருந்து தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட இந்த மோதல், ஜெலென்ஸ்கிக்கு ஒரு பெரிய பின்னடை ஏற்படுத்தியது. டிரம்புடனான நேரடி சந்திப்பு, அமெரிக்காவுடனான தனது உறவுகளை சீராக்க உதவும் என்றும், தனது நாட்டிற்கு வலுவான ஆதரவை அளிக்க உதவும் என்றும் அவர் நம்பிச் சென்றார் ஜெலென்ஸ்கி.
ஆனால் நடந்ததே வேறு… சந்திப்பின்போது, அடாவடியான தொனி, போர்க்களத்தில் மனிதவளத்துடன் போராடி, இன்னும் அமெரிக்க இராணுவ உதவியை பெரிதும் நம்பியுள்ளதால், உக்ரைன், ரஷ்யாவின் மூன்று ஆண்டு படையெடுப்பை எதிர்கொள்ளும் திறன் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டமிடப்பட்ட ஒப்பந்தம், ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்க போதுமானதாக இருக்காது என்று ஜெலென்ஸ்கி கூறியபோது டிரம்பும், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கோபமடைந்தனர்.

“புடின் ஒருபோதும் நிறுத்த மாட்டார். மேலும் மேலும் மேலும் செல்வார்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யத் தலைவர் புடின் உக்ரேனியர்களை வெறுக்கிறார். நாட்டை அழிக்க விரும்புகிறார். நாங்கள் அதைச் செய்ய முடியும். ஆனால் முடியவில்லை''என்று ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தைப் பற்றி பேசினார்.
அப்போது தலையிட்ட, டிரம்ப் மற்றும் வான்ஸ், ''ஓவல் அலுவலகத்தில் நீங்கள் காட்டும் அணுகுமுறை 'அவமரியாதைக்குரியது'. இரத்தக்களரியாக நடக்கும் மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தடுக்கிறது. நீங்கள் இன்னும் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களிடம் எதுவும் இல்லை. எங்களிடம், எல்லாம் இருக்கிறது. ஆனால் நாங்கள் இல்லாமல் உங்களிடம் எதும் நடத்த எந்த உதவியும் இல்லை'' என்றார் வான்ஸ்.

"நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள் என்று தொடர்ந்த டிரம்ப் "நீங்கள் செய்வது நாட்டிற்கு - இந்த நாட்டிற்கு - மிகவும் அவமரியாதைக்குரியது. நாங்கள் பெரிதாக உங்களை ஆதரித்தோம். "நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ரஷ்யாவுடனான போர் ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறி விடுவோம். நாங்கள் வெளியேறினால், நீங்கள் அதை எதிர்த்துப் போராடுவீர்கள். அது உங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என டிரம் எச்சரித்தார். இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒக்ஸானா மார்கரோவா தலையில் கை வைத்து அமர்ந்திருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: டிரம்பிற்கு எதிராக பேசினால் 5 லட்சம் கோடி.. உக்ரைன் அதிபரை மிரட்டும் அமெரிக்கா..!