இந்த படத்தைத் தொடர்ந்து இந்தி படங்களிலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், தென்னக திரையுலகில் தனது ஆரம்ப கால 'இருண்ட' அனுபவம் குறித்து அவர் மனம் திறந்து இருக்கிறார்.
இது பற்றி கூறிய அவர், "தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது.

இந்தப் படம் தென்னிந்திய திரை உலகில் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நினைத்து அந்த படத்தில் நடிப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!
இதற்காக ஹைதராபாத் சென்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் என்னிடம் தவறான முறையில் அணுக முயற்சி செய்தார். உங்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் எல்லா வேலைகளையும் செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

சினிமாவுக்காக அந்தப் பாத்திரத்திற்கு என்னென்ன தேவையோ அதை சிரமப்பட்டு செய்வதற்கு நான் தயாராக இருப்பதாக அவருக்கு பதில் அளித்தேன். ஆனால் அவர் பாலியல் தூண்டுதல் பற்றி பேசத் தொடங்கி விட்டார். அதன் பின் அவர் உனக்கு படத்தில் வாய்ப்பு அளித்தால் என்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக அழைத்தார்.

அதைக் கேட்டு எனக்கு கூச்சமாக இருந்ததால் மௌனமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டேன்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர் "தென்னிந்திய படங்களுக்கு ஹைதராபாத்தில் ஆடிசன் செய்த போது நாங்கள் ஒரு அறையில் இருந்தோம். தயாரிப்பாளர்கள் 'அதை'ப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுவார்கள்.

நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளை கொடுப்பார்கள். அதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் ஆனால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெளிவாக புரிந்தது இருப்பினும், எல்லோரும் அதற்கு சம்மதிப்பது இல்லை" என்றார்.
தனது மும்பை அனுபவத்தை பற்றி கூறும்போது,திரைப்படத்தில் புதுமுகங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் தயாரிப்பாளர்களை 15% சம்பளத்தை திருப்பி வாங்கிக் கொள்கிறார்கள்" என்றும் தெரிவித்தார்.
தற்போது நடிகை பாத்திமா அனுராக் பாசு இயக்கம் "மெட்ரோ இன் டினோ" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்