''குடும்ப ஆட்சியை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரிலான அரங்கில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்'' என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்
.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, ''தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்.

1972ல் எந்த தீய சக்தியை எதிர்த்து, எந்த ஊழலை எதிர்த்து, எந்த குடும்ப ஆட்சியை எதிர்த்து ஆரம்பித்தாரோ திரு எம்.ஜி'ஆர். அவருடைய பெயரில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது நமது முதல் பொதுக்குழு. என்ன ஒரு வரலாறு..! என்ன ஒரு வரலாற்று இணைப்பு..! என்ன விமர்சனம் பண்ணுகிறார்கள்? ஒர்க் அட் ஹோம் என்கிறார்கள். எந்த அளவிற்கு இந்த இரண்டு மாதங்களில் தலைவர் விஜய் மேற்பார்வையில் இங்கு இருக்கக்கூடிய எல்லாருடைய மாநில நிர்வாகிகள் பார்வையில் சுமார் 2 லட்சத்து 22,000 பொறுப்பாளர்களை நியமித்து ஒவ்வொரு நியமனத்தையும் தலைவர் அறிவுறுத்தலின்படி நியமித்துள்ளோம்.
இதையும் படிங்க: தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோறு போட்டு பாஜகவின் 'பி' டீம் என்பதை உணர்த்தும் விஜய்..?

70 ஆயிரம் பூக் கமிட்டியில் 50,000 பூத்து கமிட்டி வெரிஃபிகேஷனை முடித்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் கட்சியினுடைய உட்கட்டமைப்பில் தலைவர் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானது. உட்கட்டமைப்போடு நாம் தேர்தல் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்வது போல ஒர்க் அட் ஹோம் இல்லை. உங்களுக்கு எல்லாம் ரிட்டயர்மென்ட் கொடுப்பதற்கு தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம். உங்களது 70 வருட அரசியல், உங்களுடைய ஒட்டுமொத்த மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி, 40 வருடங்களாக இந்த அமைச்சர் பெரிய ஆள்... அந்த அமைச்சர் பெரிய பணக்காரர் என்கிறார்கள்.

இந்த ஊழல் அமைச்சர்களையும், ஆட்சியையும், அவர்களது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக தூக்கி எறிய கட்சியினுடைய உட்கட்டமைப்பை அமைதியாக, பொறுமையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் பொதுச் செயலாளர் அறிவிப்பார்கள். தாவெகவின் கட்டமைப்ப்ய் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தும். கட்சியினுடைய கட்டமைப்பு எந்த அளவிற்கு 70 வருட கட்சிகளுக்கு ஒரு பெரிய சேலஞ்சாக இருக்கப் போகிறோம் என்பதை சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்” என்றார்.
மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுக்கு போட்டியாக பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது. வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டும். அதுபோன்ற வரவேற்பு விஜய்க்கும் அளிக்கப்பட இருக்கிறது. 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்து நின்று வரவேற்கின்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய்க்கு முழு அதிகாரம்; தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்ன?