மும்மொழி கல்வி கொள்கையை அமுல்படுத்தினால் தான் நிதி உதவி கிடைக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்து இருப்பது சர்வாதிகார மனப்பான்மை என கிருஷ்ணகிரியில் அதிமுக துனை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் காவல்துறையினர் கவுன்சிலிங் செய்ய வேண்டும், அரசுதான் எல்லா விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு மாணவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாகும். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டதாக பொதுவாக சொல்கிறார் 520 வாக்குறுதிகளை காட்சியின் புத்தகமாக வெளியிட்டார் அதேபோல் நிறைவேற்றிய சாதனைகளை ஆட்சிக்கு புத்தகமாக வெளியிடுவாரா? என்பதை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: தொடர்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்… அதிமுக இணைப்பு..? பரம ரகசியத்தை போட்டுடைத்த ஓ.பி.எஸ்..!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்ற சூழல் உருவாகுவதற்கு இந்த அரசு தான் காரணம் ஆட்சியாளர்கள் தான் காரணம் அதற்கு சின்ன உதாரணம் கஞ்சா புழக்கத்தை அரசு செய்துள்ளது. திமுகவினர் தான் கஞ்சா விற்பனை செய்கின்றனர். அதனால் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் திணறுகிறது. கஞ்சா புழக்கத்தை தடுக்க தமிழக அரசு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் பாலியல் குற்றத்தை தடுக்க தவறிய காவல்துறை அதன் பொறுப்பை வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கான் ராஜினாமா செய்ய வேண்டும்

மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிமுக முன்மொழி கல்விக் கொள்கையை ஏற்காது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த ஓபிஎஸ்... ஒரே வார்த்தையை மூன்று முறை அடித்துக்கூறி அதிரடி...!