2026 தேர்தல் பணிகளுக்காக 82 கழக மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய கூட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா அழைப்பிதழ், பேனர்கள் என அனைத்திலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் அதில் பங்கேற்கவில்லை எனக்கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

தற்போது மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பெயர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாத நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும்.
இதையும் படிங்க: 82 மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்… பட்டியலில் விடுபட்ட செங்கோட்டையன்..!

கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது.அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது.

நான் சாதாரண தொண்டன் என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை அதில் கலந்து கொள்ளவில்லை என தான் ஏற்கனவே கூறினேன் என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஆடிப்போன ஈபிஎஸ்...!