2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதுமே சர்ச்சையும் தொடங்கிவிட்டது . சட்டசபைக்குள் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார் .தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . கண்டன போஸ்டரில் தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநர் அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி என்றும் அதில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி "சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுகிறேன் நீங்க நேக்கா வெளியே போடுங்க என்றும்" அதேபோல் ஆளுநர் சூப்பர்யா நீ தான் உண்மையான விசுவாசி எனவும் மேலும் பாஜக அண்ணாமலை சட்டப்பேரவையில் இருந்து தலையை வெளியே நீட்டுகின்ற மூன்று பேரின் உருவமும் இடம்பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி திமுக அரசுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிமுக சார்ப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் தற்போது திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த கண்டன போஸ்டரை ராணிப்பேட்டை, வாலாஜா , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வழியாக செல்லும் மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்
இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்