அமெரிக்காவின் 9 வது எஃப் பி ஐ இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் பிரமோத் வினோத் காஷ் பட்டேல் பதவி ஏற்றுள்ளார். அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பான எபிஐ இயக்குனர் பொறுப்பு அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவி பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் பிறந்த காஷ் பட்டேலின் பெற்றோர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். லண்டனின் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் பேஸ் யுனிவர்சிட்டியிலும் கல்வி பயின்ற காஷ் பட்டேல் ஒரு அரசு வழக்கறிஞராக இருந்தவர். கடந்த ட்ரம்ப் ஆட்சி காலத்தில் முழு நேரமும் ட்ரம்ப் உடனே பயணம் செய்து அவருக்கு ஒரு செக்யூரிட்டி போல காஸ் மாறி இருந்ததால் டிரம்ப்பிற்கு காஷ் பட்டேல் பற்றி அனைத்தும் தெரியும்.
இதையும் படிங்க: கடும் எதிர்ப்பு..! ஜஸ்ட் மிஸ்.. தப்பித்த காஷ்யப் பட்டேல்.. முதல் இந்திய வம்சாவளி FBI தலைவர்..!

இவர் ஒரு முழுமையான டிரம்ப் விசுவாசி ஆவார் தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினராக இருந்த காஷ் பட்டேல் தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே எஃப்பிஐ தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார். ஆனால் காஷ் பட்டேல் மிகவும் காறாரான நபர் என்பதால் அவருக்கு செனட் சபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, 100 பேர் கொண்ட செனட் சபையில் 49 பேர் காஷ் பட்டேல் இந்த பதவிக்கு வரவே கூடாது என அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

காஷ் பட்டேல்க்கு ஆதரவாக 51 செனட் உறுப்பினர்கள் வாக்களித்ததால் இவரின் தலை தப்பியது. மிகவும் பதற்றத்தோடு இருந்த காஷ் பட்டேல் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் முன்பாக பதவி ஏற்று கொண்ட காஷ் பட்டேல் இந்து மத புனித நூலான பகவத் கீதை மீது கை வைத்து சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டார். காஷ் பட்டேலோடு அவரது அக்கா மற்றும் அவருடைய பெண் நண்பர்,உறவினரின் மகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காஷ் பட்டேலின் பெண் நண்பர் வில்கின்ஸ் லண்டனில் படித்த ஒரு வழக்கறிஞர் ஆவார். பதவி ஏற்றவுடன் தனது பெற்றோர் மற்றும் பெண் நண்பர் ஆகியோரை தனது அலுவலக ஊழியர்களுக்கு காஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காஷ் பட்டேல், தனது உடனடி அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிட்டதை மக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் தெரிவித்தார். அதாவது தூங்கி வழிந்து கொண்டிருக்கும் அல்லது தலைமை அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யாமல் டைம் பாஸ் செய்து கொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த எஃபிஐ ஏஜென்ட்களை நாடு முழுவதும் பரவலாக தூக்கி அடித்து டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
மேலும் 500 பேரை அலபாமா மாகாணத்திற்கு டிரான்ஸ்பர் செய்து உடனடியாக உத்தரவிட்டுள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பாகவே சொல்லி வந்த இந்த விஷயத்தை பதவியேற்ற முதல் நாளிலேயே காஷ் செய்து முடித்து இருப்பதால் அமெரிக்காவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மிக முக்கியமான புலனாய்வு நிறுவனமான FBI யின் செயல்பாடுகள் சரியான அளவில் இல்லை, பல விஷயங்களில் ஒழுங்காக வேலை செய்யாமல் அரசை ஊழியர்கள் ஏமாற்றி வருவதாக பகிரங்கமாக காஷ் பட்டேல் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்க நிதி உதவி விவகாரம்: மோடிக்கு எதிராக லண்டனில் சதி திட்டம் தீட்டிய ராகுல்; பாஜக திடுக் குற்றச்சாட்டு..!