தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் வரை இருந்துவிட்டார். 3 ஆண்டுகளில் தலைவர் பதவி மாற்றப்பட வேண்டும். அண்ணாமலையே நீடிப்பார் என்கிற நிலையில் திடீரென அரசியல் சூழல் மாறியது. அதிமுக பாஜக கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டது. எடப்பாடி அமித்ஷா சந்திப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டணி உறுதியானவுடன் முதல் கண்டிஷன் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதே. அண்ணாமலை தமிழக பாஜகவின் ஒரு புயல்போன்ற கேடர் என்றாலும் அதிமுக கூட்டணியை உடைத்ததையும், தலைவர்களை விமர்சித்ததையும், 2024 தோல்வியையும் அதிமுக தலைமை மறக்கவில்லை. அதன் விளைவு அண்ணாமலை மாற்றத்தை பாஜக தலைமை ஒப்புக்கொண்டது. 
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனுக்கு சான்ஸே இல்லை... பாஜகவின் பயங்கர திட்டம்... அடுத்த தமிழக தலைவர் இவரா..?
அண்ணாமலையையும் அழைத்து இதுபற்றி சொல்லப்பட்டது. அடுத்த தலைவராக முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கலாம் அங்கு பாஜக காலூன்ற அது மேலும் உதவும் என முடிவெடுக்கப்பட்டபோது நயினார், கருப்பு முருகானந்தம் போட்டியில் இருந்தனர். ஆனால் அரசியல் அனுபவம், நிதான அணுகுமுறை, திராவிட கட்சிகளிலிருந்து வந்தவர், அனைவரிடமும் நட்புடன் பழக கூடியவர் நிதானமானவர் என்கிற தகுதியில் நயினார் நாகேந்திரன் முந்தினார்.

இந்நிலையில் நேற்று பிரதமர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியிலும் நயினார் மேடையேற்றப்பட்டார். இந்நிலையில் மாலை அவருக்கு வந்த அவசர அழைப்பின்பேரில் மதுரை வந்து மாலை 5-30 மணி அளவில் இண்டிகோ விமானம் மூலம் டெல்லி சென்றார் நயினார். நாளை அமித்ஷாவை சந்திக்கிறார்.

ஏப்.9 அன்று சென்னை வரும் பாஜக மேலிட பொறுப்பாளர் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏப்.10 சென்னை வரும் அமித்ஷா அதிருப்தி நிர்வாகிகளை சந்திக்கிறார். மொத்தத்தில் புதிய தலைவர் குறித்தும் அவர் பொறுப்பேற்றப்பின் அவருக்கு ஒத்துழைப்பு தருவது குறித்தும், கூட்டணி குறித்தும் உரிய அறிவுரைகளை வழங்குவார் என தெரிகிறது. அதன் பின்னர் ஏப்.15 தேதிக்குள் தமிழ் நாடு பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கொடுத்த ஹின்ட்.. அடுத்த பாஜக தலைவர் இவரா..? தூக்கியடிக்கப்படுகிறாரா அண்ணாமலை?