தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதை தவிர விஜய் பெரிய அளவில் வேறு எதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் பலர் விஜய் கடைசியாக நடித்த கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே படுதோல்வியடைந்துவிட்டன. அவரது மார்க்கெட் சரிய தொடங்கிவிட்டது. இதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றனர். இதற்கிடையே அவர் கடைசியாக ஒரு படம் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் 2026ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அரசியலில் மிக தீவிரமாக விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!

இதற்கிடையே நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய்க்கும் அவ்வப்போது மனகசப்புகள் ஏற்படுவதோடு சில நேரங்களில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு தவெக பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால் விஜய் அடிக்கடி தனது தாயையும் தந்தையையும் நேரில் சென்று சந்திப்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அதேபோல் கட்சி கூட்டங்களிலும் அவரது தாய் தந்தை பங்கேற்பதையும் காண முடிகிறது. தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்குக்கூட சந்திரசேகர் வந்திருந்தார். இந்த நிலையில் எஸ்.ஏ.சி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதிக்கிறார் என்று எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனையடுத்து விஜய்யை நான் எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை. என்னைவிட அவர் புஸ்ஸி ஆனந்த்தைதான் அதிகம் நம்புகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்களின் ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
நான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்து அது பின்னர் சரிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற செயல்கள் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே சங்கடத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டே நடனத்தை பார்க்க தயாரா..! 'ஜனநாயகன்' பட அடுத்த அப்டேட் இதோ..!