நாளை ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அப்போது பாஜகவினர்கள் மத்திய அமைச்சர் வணக்கம், நல்லா இருக்கீங்களா என தமிழில் நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், “பாம்பன் கடல் பாலம் முதல் செங்குத்தான கடல்பாலம். நமது பொறியாளர்கள் மூலம் இந்த பெரிய வேலை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற முக்கிய பாலங்களைக் கட்டியதற்கும், தமிழ் கலாச்சாரத்துடன் இணைத்ததற்கும் பிரதமருக்கு நன்றி சொல்கிறேன். மதுரை ரயில் நிலையத்தையும் பார்க்க உள்ளேன், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்க்க உள்ளேன். உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் அதை மீண்டும் கட்டமைக்க பார்வையிட உள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலை மாற்றப்பட்டால் என்ன நடக்கும்..? அமித்ஷாவுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்..?
இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் ராமேஸ்வரத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மதுரை ரயில்வே நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக மதுரை ரயில் நிலையம் வந்த அஸ்வினி வைஷ்ணவிடம் "வேண்டும் வேண்டும் மீண்டும் அண்ணாமலை வேண்டும்" என பஜக தொண்டர் கோஷமிட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவுடனான கூட்டணி பிடிக்காததால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக புதிய மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், எங்களுக்கு அண்ணாமலை தான் தலைவராக தொடர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பரமக்குடி, சென்னை என அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வந்த ஆதரவாளர்கள், இன்று ஒரு படி மேலே போய் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர்களை அவமதிக்கும் வகையில் கோஷம் எழுப்பியது பாஜக தலைமையைக் கடுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...!