தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ''12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு உடனடியாக 'ஒய்'பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய 8 -11 பாதுகாப்புப்படை வீரர்கள், காவல்துறை படையினர் , தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு அரணாக செல்வார்கள். அவர்கள் தமிழ்நாட்டிற்குள் விஜயின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பணிபுரிவார்கள்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு 'ஒய்'பிரிவு பாதுகாப்பு..! பத்தல பத்தல... ஆதரவாளர்கள் விரக்தி..!

இந்த அளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கான முடிவு, தேவைப்படும்போது முக்கிய அரசியல் பிரமுகர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 'ஒய்' தர பாதுகாப்பு, தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் பிரத்தியேகமாக செயல்படும். சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள குறிப்பாக பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் இந்த பாதுகாப்பு இருக்கும்.
தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அதிகாரிகளின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். மாநில அரசியல் சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் பொது நபர்களுக்கு பாதுகாப்பைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் எடுத்துக்காட்டுகிறது.
''தமிழகத்தில் இன்றைய தேதிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு மிக அவசியம் தேவைப்படும் நபர் தவெக தலைவர் விஜய் அவர்கள் தான். விரைவில் மத்திய உள்துறை இந்த பாதுகாப்பினை உயர்த்திடும் என நம்புகிறோம்'' என விஜய் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், சீமான் ஆதரவாளரும், நாதக நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில், ''கொள்கைத்தலைவராக பெருந்தலைவர் காமராஜரை ஏற்றுக்கொண்ட திரு.விஜய் அவர்களே..
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வரலாறு தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் ! காமராஜர் முதல்வராக இருக்கும் போது வைகை அணையை திறக்கச் செல்கிறார் அங்கே மக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.அவரின் பாதுகாப்பு கருதி காவல்துறை வாகனம் சைரன் ஒலித்தபடி முன்னே செல்கிறது ,சைரன் ஒலியை காதில் கேட்ட காமராஜர் ''அது என்னப்பா சங்கு சத்தம் நான் என்ன செத்தா போயிட்டேன் ‘’ என தன் ஓட்டுனரிடம் கேட்கிறார்..!
கொள்கைத்தலைவராக பெருந்தலைவர் காமராஜரை ஏற்றுக்கொண்ட திரு.விஜய் அவர்களே !
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வரலாறு தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் !
காமராஜர் முதல்வராக இருக்கும் போது வைகை அணையை திறக்கச் செல்கிறார் அங்கே மக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு… pic.twitter.com/aFhTS6cIml
— Duraimurugan (@Saattaidurai) February 14, 2025
ஐயா உங்க பாதுகாப்புக்கு காவல்துறை வாகனத்தில் வருகிறார்கள் என ஓட்டுனர் சொன்னதும் ,இடைமறித்த காமராஜர் அந்த போலிசை கூப்பிடுங்கிறேன் எனச் சொல்ல காவல்துறை அதிகாரி வந்து நிற்கிறார். எனக்கு எதுக்கு பாதுகாப்பு ? நான் என்ன பாகிஸ்தான்லேயே போயிட்டு இருக்கேன் ? போங்கப்பா பெட்ரோலை ஏன் வீண்டிக்கிறீங்க என்று காவல்துறை வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்துவிட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் மக்களை சந்தித்தார் அதனால்தான் அவர் பெருந்தலைவர் .
12 பேர் கொண்ட மாதம் 10 லட்சம் வரை அரசின் வரிப்பணத்தில் செலவு செய்யப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பை ஒரு முட்டை வீச்சுக்கு பயந்து கேட்கும் நீங்கள் காமராஜரை எந்த அடிப்படையில் கொள்கைத் தலைவராக ஏற்றீர்கள்? காமராஜர் மலை!
நீங்களோ மடு'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினா..? ம்ஹூம்... விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல் தெரிகிறது' - செல்லூர் ராஜூ கிண்டல்