1914 ஆம் ஆண்டு பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த பாம்பன் பாலம் கட்டி 110 ஆண்டுகளை கடந்த நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் அதன் உறுதித்தன்மை குறைந்தது. அதுமட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் தூக்கு பாலத்தில் பழுது ஏற்படவே, பாதுகாப்பு கருதி 2022 ஆம் ஆண்டு ரயில்சேவை நிறுத்தப்பட்டது.

பிறகு பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. 2 ஆயிரத்து 78 மீட்டர் நிலத்திற்கு கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு திமுக செய்தது என்ன.? இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அண்ணாமலை சரவெடி.!!

இதையடுத்து, புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து நேரடியாக பாம்பன் வர உள்ளார்.

இந்த திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதனைத்தொடர்ந்து, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: எத்தனை தேர்தல் வந்தாலும் மோடி தான் பிரதமர்... இஃப்தார் விழாவில் ஓபிஎஸ் புகழாரம்!!