வக்ஃபு திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மைகள், அதன் கிடைக்கும் பயன்கள், சலுகைகள் குறித்து மக்களுக்கு நேர்மறையான முறையில் எடுத்துக்கூட பாஜக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் அர்ஜூன் சிங் கூறியிருப்பதாவது:

“வக்ஃபு சீர்திருத்தம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு பரப்புரை என்ற பெயரில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நாடுமுழுவதும் வரும் 20ம் தேதி முதல் மே 5ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், தேசிய செயலாளர்கள், அனில் அந்தோனி, அரவிந்த் மேனன், சிறுபான்மைஅமைப்பின் தலைவர் ஜாமால் சித்திக் ஆகியோர் பிரசாரத்தை ஒருங்கிணைக்க உள்ளனர்.
இதையும் படிங்க: வக்ஃபு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்.. ப.சிதம்பரம் நம்பிக்கை..!
“வக்ஃபு திருத்த மசோதா, பிரதமர் மோடியின் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட்டது வரலாற்று சிறப்பு, இந்த மசோதாவால் நாட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. சமூக,பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டுத் தேடலின் விளைவாகவே இந்த வக்ஃப் திருத்த சட்டம் இருப்பதாக பிரதமர் மோடி உணர்கிறார்.

இந்தச் சட்டம் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும், விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும், குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இது உதவும். குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள் மற்றும் பாஸ்மண்டா முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
மாநில அளவில், நகரங்களில் முக்கிய இடங்களைத் தேர்வு செய்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும். முஸ்லிம் சமூகத்தில் இருந்து மதகுருமார்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பெண் ஆர்வலர்கள், ஊடத்தினர், சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் அழைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் கிறிஸ்தவ சமூகத்தினரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு எம்.பி. எம்எல்ஏ குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவில், முஸ்லிம் சமூகத்தில் இருந்து பிரபலமான நபருடன் சேர்ந்து பத்திரிகையாளர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பாஜகவின் இளைஞர் அணியும் கலந்துரையாடல் கூட்டத்தையும் நடத்தலாம்.
இது தவிர மாவட்டங்கள், தாலுகாக்கள், கிராமங்களில் வீதிப்பிரசாரம் செய்தல், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடலாம். கிராபிக்ஸை பயன்படுத்தி டிஜிட்டல் பிரச்சாரம் செய்தல், வீடியோ வெளியிட்டு மாவட்டந்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். தேசிய அளவில் பயிலரங்குகள் ஏப்ரல் 10ம் தேதி முதல் மாநிலத் தலைநகரிலும், பிற பகுதிகளில் வரும் 15 முதல் 17ம்தேதி வரையிலும், 18 முதல் 19தேதிகளிலும் நடத்த வேண்டும்.
இவ்வாறு பாஜக விடுத்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்த்தாலும், முதல்ல அமல்படுத்துவோம்..! வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை..!