தில்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் உள்ள பாஜகவினரை குதூகலத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் அக்கட்சியின் தொண்டர்கள் டெல்லி வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதால் இங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடமும் நிலவியது. தற்போது 46 தொகுதிகளுக்கு மேல் பெற்று பாஜக அசைக்க முடியாத ஆளுங் கட்சியாக அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது அதனை அடுத்து வந்த ஆம் ஆத்மி கட்சி, 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டியை கொடுத்த பாஜக ...ஆம் ஆத்மிக்கு பெரிய வீழ்ச்சியை பரிசாக அளித்துள்ளது. அந்த வகையில் அந்தக் கட்சியின் தேசிய தலைவரான அரவிந்த் கேஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி
பல அமைச்சர்கள் தோல்வி அடைந்து எம்எல்ஏ பதவியை பறி கொடுத்துள்ளனர். சிட்டிங் முதலமைச்சர் ஆன அதிசி மெர்லினா மட்டும் தட்டுத்தடுமாறி பல சுற்றுகள் பின்தங்கிய நிலையில் இறுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் பேட்டியளித்த மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி டெல்லியில் இன்று நடைபெற்ற அதே சம்பவம் 2026 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் நிச்சயம் நடக்கும் என அடித்துக் கூறினார். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துடைப்பத்தை எட்டு எட்டாய் வெட்டி எறிந்த கை… அரவிந்த் கெஜ்ரிவாலை காவு வாங்கிய காங்கிரஸ்..!