அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான குழுவினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சமாதான தூதுவர்கள் தற்போது மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எங்களிடம் இப்போது ரஷ்யாவிற்கு செல்லும் நபர்கள் உள்ளனர் என்றும், உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் முன்வைப்பதற்காக தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
இதையும் படிங்க: 'எலான் மஸ்க்குடன் உடலுறவு கொள்வது... புழு துளைக்குள் செல்லாமல் இருப்பது..! காரித்துப்பிய டிரம்பின் எக்ஸ்..!
ரஷ்யாவிடமிருந்து போர் நிறுத்தம் தொடர்பான நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாகவும், அந்த நல்ல செய்தி இந்த பயங்கரமான ரத்தக்களரியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 80% பயனுள்ள விஷயமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அயர்லாந்து பிரதமருடனான ஓவல் அலுவலக சந்திப்பின் போது ட்ரம்ப் மேலும் பல கூடுதல் தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை இந்த முன்மொழிவு குறித்து வாஷிங்டனிடமிருந்து மேலும் கூடுதல் தகவல்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது.
ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் முன்மொழிவை நிச்சயம் ஏற்பார் என்ற நம்பிக்கையை டிரம்ப் வெளிப்படுத்தினார்.
இந்த போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் புடினும் போர் நிறுத்தத்தை ஏற்பார் என்று நம்புகிறேன்," என்று அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னதாக, சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க கிவ் தயாராக உள்ளதாக கூறியிருந்தார். ரஷ்யா போர் நிறுத்தத்தையும் அமைதியையும் விரும்புகிறதா? அல்லது மக்களைக் கொலை செய்வதை தொடர விரும்புகிறதா? என்பதைப் பொறுத்தே எல்லாம் உள்ளது," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைனின் இந்த கேள்விக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்.
2022 பிப்ரவரியில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, தொடர்ந்து நடைபெறும் மோதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க-உக்ரைன் கூட்டு முன்மொழிவு, போர் நிறுத்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான நகர்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப் - ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய பிறகு, உக்ரைனுக்கு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை தொடர்பான உதவிகளையும் நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சவுதி அரேபியா ஜெட்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது ஆதரவை மீண்டும் தொடங்கியது.
இன்று முன்னதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யா இந்த போர் நிறுத்த முன்மொழிவை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக வலியுறுத்தினார். "அவர்கள் நிபந்தனையின்றி இதை செய்யத் தயாராக உள்ளார்களா? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்," என்று ரூபியோ கூறினார்.
"அவர்களின் பதில் ‘ஆம்’ என்றால், பேச்சுவார்த்தையில் நாம் உண்மையான முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பது தெரியும், மேலும் அமைதிக்கு உண்மையான வாய்ப்பு உள்ளது. அவர்களின் பதில் ‘இல்லை’ என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, மேலும் அவர்களின் நோக்கங்கள் தெளிவாகிவிடும்," என்று அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: அவரு சொன்னா கேட்கணுமா..? டிரம்பை மதிக்காத எலான் மஸ்க்!!