வரிகள் என்ற வார்த்தை ஆரம்ப காலத்தில் இருந்தே யாருக்கும் பிடிக்காத ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பண்டைய எகிப்து நாட்டின் பழங்குடி இனத்தவர்களில் இருந்தே கஷ்டப்பட்டு நீங்கள் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பது யாருக்கும் பிடிக்காத ஒன்று தான்.
நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த சமயத்தில் உலக நாடுகளில் இருந்த சில விசித்திரமான வரிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜன்னல் வரி
1696 ஆம் ஆண்டில் வீட்டில் அமைக்கப்படும் ஜன்னல்களுக்கு வரி விதிக்கப்பட்டது. அப்போதைய இங்கிலாந்து மன்னர் ஆட்சியில், ஒரு வீட்டில் பத்து ஜன்னலுக்கு மேல் இருந்தால் வீட்டின் உரிமையாளர் அதிக வரி செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளே உடனே மன்னிப்பு கேளுங்க..! ரிவர்சில் வாங்கி அடிக்கும் சீமான்..
இந்த வரியில் இருந்த தப்புவதற்காக சிலர் ஜன்னல்களே இல்லாத வீட்டையும் கட்டத் தொடங்கினார்கள். இதன் காரணமாக நோய் தொற்றும் ஏற்பட்டது. ஒரு வழியாக 155 ஆண்டுகளுக்குப் பிறகு 1851 ஆம் ஆண்டில் இந்த வரி ரத்து செய்யப்பட்டது.
இதே போல் மெழுகுவர்த்தி போன்றவைகளுக்கும் இங்கிலாந்தில் வரி விதிக்கப்பட்டது. 1709 ஆம் ஆண்டில் உரிமம் இல்லாமல் யாரும் மெழுகுவர்த்தி தயாரிக்க முடியாது. அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது.
தாடிக்கும் வரி
இப்போது தாடி வைக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை நாம் பார்க்கிறோம். இப்படி தாடி வைப்பதற்கும் ரஷ்யாவில் ஒன்றாம் பீட்டர் மன்னர் காலத்தில் வரி விதிக்கப்பட்டது. ரஷ்ய மக்களை மேற்கு ஐரோப்பா போல் மாற்றுவதற்காக ஆண்களுக்கு சுத்தமாக மொட்டை அடிக்கப்பட்டது.
அப்படி யாராவது தாடி வைக்க விரும்பினால் அவர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பான்மை ஆண்கள் தங்கள் தாடியை மழிக்க தயாராகி விட்டதால் இந்த வரியால் பயன் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் 1772 ஆம் ஆண்டில் கேத்தரின் தி கிரேட் மூலம் இந்த வரி ரத்து செய்யப்பட்டது.
பீட்டர் மன்னருக்கு முன்பாக இங்கிலாந்தில் ஹென்றி மன்னர் காலத்திலும் தாடிக்கு வரி விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் டிவி வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா?. பார்வையற்றவர் வீட்டில் டிவி வைத்திருந்தாலும் அவர்களும் வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர்களுக்கு பாதி வரி மட்டும் தான்
கலிபோர்னியா நாட்டில் விற்பனை இயந்திரத்தின் மூலம் நீங்கள் பழ வகைகளை வாங்கினால் 33 சதவீத வரி செலுத்த வேண்டும். ஆனால் மளிகை கடைகள் மற்றும் உழவர் சந்தைகளில் நீங்கள் பழம் வாங்கினால் வரி விலக்கு உண்டு. இதற்கு என்ன காரணம் என்பதை யாரும் சரியாக விளக்கிச் சொல்லவில்லை.
இறுதியாக ஒன்று இப்போது குடிக்கும் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டியது இருப்பது போல் வருங்காலத்தில் சுவாசிக்கும் காற்றுக்கும் நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்
பென்சில் வேனியாவில் காற்றுக்கு வரி விதிக்கப்படுகிறது தான். ஆனால் இப்போது வரை சுவாசிக்கும் காற்றுக்கு அல்ல; எரிவாயு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அமுக்கப்பட்ட காற்று இயந்திரத்தில் இருந்து அல்லது கார் கழுவும் இடத்தில் நாணயத்தால் இயக்கப்படும் வெற்றிடத்தில் இருந்து காற்று வெளியேறினால் உங்களுக்கு வரி விதிக்கப்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் ரோமானிய பேரரசில் திருமணம் ஆகாமல் பேச்சிலராக இருப்பவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டது மற்றொரு சுவாரஸ்யம்.
இவ்வளவு ஏன் தமிழகத்திற்கு பக்கத்தில் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு காலத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் தீண்ட தகாதவர்களாக நடத்தப்பட்ட ஒரு சமுதாயத்து பெண்கள் மார்புச் சேலை அணிய தடை விதித்து மார்பகங்களுக்கும் வரி விதித்த கொடுமையும் நமக்குத் தெரிந்ததுதான். அதற்கு எதிராக வெகுண்டு எழுந்த மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் இந்த வரி பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!