உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு எடுக்கும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த போதிலும் அதை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த செயல்கள் சரியானதுதான் என்ற வகையில் முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவரின் வீட்டை இடிக்கும் அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் குறித்தும் வழிகாட்டி நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: 15 நாள் கெடு: எங்கள் புல்டோசர் இடிக்கும்… மசூதியை இடிக்க யோகி ஆதித்யநாத் நோட்டீஸ்..!
இருப்பினும் கடந்த 2017ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான உ.பியில் போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக முதல்வர் ஆதித்யநாத் அரசால் எடுக்கப்பட்ட இந்த புல்டோசர் நடவடிக்கை அந்த மாநிலத்தில் இன்னும் தொடர்கிறது.

குறிப்பாக சிறுபான்மையினர், குற்றவாளி முஸ்லிமாக இருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர் முஸ்லிமாக இருந்தால் இந்த புல்டோசர் நடவடிக்கை தீவரமாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் நேற்றுகூட உ.பி அரசை கடுமையாக கண்டித்திருந்தது. ஆனால், இந்த புல்டோசர் நடவடிக்கை சரியானதுதான் என்ற ரீதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஏஎன்ஜ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீதியின் மீது நம்பிக்கையிருப்பவர்களுக்கு நீதி அவர்களுக்கு செய்திருக்கிறது. ஆனால், சட்டத்தையும், நீதியையும் கையில் எடுத்தவர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கு ‘எந்த மொழியில்’ புரிந்து கொள்வார்களோ ‘அந்த மொழியில்’ விளக்க வேண்டும். யாரேனும் ஒருவர் தீவிரமான வன்முறையுடன் எங்களை தாக்கும் நோக்கில் எங்கள் முன் வந்து நின்றால், நாங்களும் வன்முறை மூலம்தான் பதில் அளிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மதுராவில் நடந்து வரும் சர்ச்சைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில் “ உத்தரப்பிரதேச அரசு மதுரா விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடைபிடிக்கிறது, இல்லாவிட்டால் அங்கு ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும். நான் ஏன் மதுரா விஷயத்தை எழுப்பக்கூடாது? மதுரா கிருஷ்ணர் பிறந்த இடம் இல்லையா” எனக் கேட்டார்.
சம்பல் பகுதியில் சமீபத்தில் ஹோலி பண்டிகையன்று ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை பிற்பகலில் வைக்க வேண்டும்,வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல், ஆண்டில் 52 வாரத்தில் வெள்ளிக்கிழமை வருகிறது, ஆனால், ஹோலி ஆண்டில் ஒருமுறைதானே வருகிறது ஆதலால் வீட்டிலேயே இருந்து முஸ்லிம்கள் தொழுகலாம் என்று அந்த காவல் அதிகாரி பேசியதை ஆதரித்து முதல்வர் ஆதித்யநாத்தும் கருத்துத் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில் “ சம்பல் பகுதியில் உ.பி அரசு சட்டத்தின் அடிப்படையில் பணியாற்றுகிறது. இந்துக்கள் வழிபாட்டு தலங்கள் மீது முஸ்லிம்கள் மசூதிகளை எழுப்பியுள்ளனர், இது தவறு இல்லையா. அவர்களின் கொள்கைகளுக்கு முரண் இல்லையா.
சம்பல் பகுதியில் 64 வழிபாட்டு தலங்கள் இருந்தன, அதில் நாங்கள் 54 கண்டுபிடித்துவிட்டோம். என்னவாக இருந்தாலும் நாங்கள் கண்டுபிடிப்போம். சம்பலில் என்ன நடந்துள்ளது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவோம். சம்பல் என்பது உண்மை. அங்கு அனைவரும் அவர்களின் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் இருக்கிறது, மசூதிகளை எங்கு வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால், முஸ்லிம் மதக் கோட்பாடுகளில் இருந்து விலகுகிறீர்கள்.
முஸ்லிம் மதக் கோட்பாட்டின்படி உன்னால் ஒரு இந்து வீடு, கோயில் கட்டப்பட்டிருந்தால் அந்த இடத்தில் வழிபாடு செய்தால் அதை கடவுள் ஏற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார். எதற்காக நீங்கள் உருவாக்கினீர்கள் உங்கள் செயல் இஸ்லாத்துக்கு எதிரானது. ஆனால்நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறோம்
இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உ.பியில் 8 ஆண்டுகளில் 210 கோடி மரங்கள்.. யோகி ஆதித்யநாத் அதிரடி..!