திருப்பூர் மாவட்டம் செமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு மகன் செந்தில் குமார் ஆகியோரை கடந்த ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.ஐ.ஜி, எஸ்.பி கண்காணிப்பில் 14 தனிப்படை மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்ய 12 எஸ்.ஐகள் நியமிக்கப்பட்டனர்.

மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீட்டில் கிடந்த நிலையில், வீட்டில் வேலை பார்க்கும் நபர் அங்கு சென்று பார்த்தபோது மூவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதனை எடுத்து அவர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக வெளியூரில் தங்கி இருந்த செந்தில் குமார் விடுமுறைக்காக தாய் தந்தையர் வீட்டிற்கு வந்தபோது இந்த துயரம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது செந்தில் குமாரின் மனைவி கதறி துடித்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண் கலங்க செய்தது.
இதையும் படிங்க: வேங்கையன் ஒத்தையில தான் வருவான்...! எவ்வளவு பேர் விலகினாலும் கெத்து காட்டும் சீமான்..!

கொலை சம்பவம் நடந்து மூன்று மாதங்களை நெருங்கிய நிலையிலும் கொலையாளிகளை போலீசார் கண்டறிய இயலவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் ஆக்ரோசமாக வசைபாடி வந்தனர். மேலும் கொலை நடந்த தினத்திலிருந்து தற்போது வரை அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் பழைய தொழிலாளர்கள் அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஒரு இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சந்தேகப்படும் நபர்கள் என அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை துவக்கம் முதலே குறிப்பிட்ட சிலரிடம் போலீஸார் விசாரிக்க முற்படும்போது பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வேலையை செய்கின்றனர் என்றும் விசாரிக்கப்படுபவர்கள் மூலம் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்படுகின்றன என்றும் சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்வதில் தடையாக உள்ளது என்று போலிஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பல வஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள துப்பாக்கி முனையில் போலீசார் துன்புறுத்துவதாகவும் மிரட்டுவதாகவும் அப்பாக்கு அப்பகுதி மக்கள் போலீசார் மீது குற்றம் சாட்டி எஸ்பி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார் விசாரணை அழைக்கப்படும் நபர்களிடம் உரிய மரியாதையுடனும் எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் சட்டப்படியே விசாரணை நடைபெறுகிறது என்றும் வழக்கை திசைதிருப்ப உண்மைக்கு புறம்பான தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பி கிரீஸ் அசோக் யாதவ் கூறுகையில், மூவர் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும், தற்போது எழுந்த புகார் தொடர்பாக மனு கொடுத்த மக்களிடம் தெளிவாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் உரிய முறையில் சமன் வழங்கப்பட்டு தான் விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் யாரும் துன்புறுத்தப்படவில்லை எந்தவித ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சப்போர்ட்... திமுகவுக்கு எதிராக சீமான் சொன்ன அந்த வார்த்தை...!