தலைமைத் தேர்தல் ஆணையர் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவதால் அதற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றம் இதைத் தெரிவித்தது.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “ தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும்” என தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசு இந்தத் தேர்வுக் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் “ தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி மாதம் 18ம் தேதி ஓய்வு பெற்று சென்றுவிடுவார். தேர்தல் ஆணையரை நியமித்தது புதிய சட்டத்தின்படி செல்லுபடியாகிவிடும். ஆனால் 2023, மார்ச் 2ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த தீர்ப்புக்கு மாறாக, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, மத்திய அமைச்சர் ஒருவரை நியமிக்க சட்டம் இயற்றியது. இது செல்லுபடியாகுமா, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பை மீறுவது போலாகுமா. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனக் குழுவில் இருந்து நீக்கியது தேர்தல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா, உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சூர்யகாந்த், வழக்கறிஞர் பூஷனிடம் கூறுகையில் “ இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இந்த நீதிமன்றம் புரிந்து கொண்டது ஆனால், முக்கியமான வழக்குகளை விசாரிக்க போதுமான நேரம் தேவை” என்றார்.
இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?

இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் “ அனுப்அகர்வால் வழக்கில் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது இதை முடிக்க அதிக நேரம் எடுக்காது” எனத் தெரிவித்தார். மற்றொரு மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜாரி வாதிடுகையில் “ 2023, மார்ச் 2ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு எந்த அடிப்படையிலும் நீக்க முடியாது. மத்திய அரசால் சட்டத்தை திருத்துவதன் மூலமோ அல்லது புதிய சட்டம்இயற்றுவதன் மூலமோ தீர்ப்பை மீற முடியாது” என்றார். இந்த விவாகரத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு “ வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் கருத்துக்கு அதிகாரமிருக்கிறதா அல்லது சட்டம் இயற்றுவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான வழக்கு” எ னத் தெரிவத்தார்
இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூடுகிறது: பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே பங்கேற்பு