தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது 12 கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம் அதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:-
இதையும் படிங்க: "எங்களால் உத்தரவிட முடியாது.." தமிழக கவர்னரை வாபஸ் பெறும் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
* தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு இங்க கவர்னர் அனுப்பலாமா?
*அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு(ஜனாதிபதிக்கு) கவர்னர் ஆனுப்பலாமா?
* தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
* பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை கவர்னர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
* மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
* குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
* அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
* குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி? என 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

இந்த கேள்விகள் மீது தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கு விசாரணையின்போது கவர்னரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது முடிவெடுக்க வகை செய்யும் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 201-ஆவது விதி, நாடாளுமன்றத்தால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வகை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 111-ஆவது விதி தொடா்பாக நீதிபதிகள் விரிவாக ஆராய்ந்தனா்.

12 மசோதாக்கள் - ஆளுநர் நியமனம்: கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.
இந்த விவகாரத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள்.. தேர்தலுக்கு வாழ்நாள் தடை... நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?