சஹரான்பூர் மாவட்ட சிறைக்கு இந்த போலிக் கடிதம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவின்படி, ஜானக்பூரி போலீஸ் நிலைத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சஹான்பூர் மாவட்ட சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளி அஜெய் என்பவரை விடுவிக்க திட்டமிட்டு, குடியரசுத் தலைவர் கையொப்பத்தை போலியாக தயார் செய்து ஆணைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் சத்யபிரகாஷ் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளார்.

சிறைத்துறை கண்காணிப்பாளர் சத்யபிரகாஷ் கூறுகையில் “ கொலைக்குற்றவாளி அஜெய் என்பவரை விடுவிக்க குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளதாக கடிசம் வந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், அதுபோன்ற உத்தரவு ஏதும் பிறப்பித்ததாகத் தெரியாநிலையில் அந்த கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.
இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அடுத்த அதிரடி: மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற புதிய வியூகம்
அந்த கடிதத்தைஆய்வு செய்தபோது, அது போலி எனத் தெரியவந்தது. குடியரசுத் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அவ்வாறு எந்த கடிதத்தையும், ஆணையையும் பிற்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரத்தன்மையுடன் எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தை ஜானக்புரி காவல்நிலையத்துக்கு தெரிவித்து அவர்கள் மூலம் முதல் தகவல் அறிக்கை அடையாளம் தெரியாவர்கள் மீது பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் - கொந்தளித்த சீமான் ...!