மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கும் திட்டம் டெல்லியில் கொண்டுவரப்பட்டுள்ளது. உதவித்தொகை அறிவிப்பை வெளியிடும் நோக்கத்தில், டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முதலனைச்சர் ரேகா குப்தா தலைமையில் கூடம் நடைபெற்றது. அதில், மகளிர் உதவித்தொகைக்கான திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, "இன்று மகளிர் தினம். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
அண்மையுல் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டியாக ஆம் ஆத்மி கட்சியும், மாதம் ரூ. 2,100 வழங்கும் என உறுதி அளித்தது. தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் மகளிர் தினமான இன்று தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, " பெண்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான இளையதளம் உருவாக்கப்பட்டு, பெண்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் உதவித்தொகை பெறும் அளவுகோல்கள் மற்றும் பிற விஷயங்களைத் தீர்மானிக்க கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்கய்யா..! பாஜக ஆட்சி வந்ததும் தலைநகரில் அதிரடி மாற்றம்...! பரபரப்பு தகவல்கள்..!