டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளாக ஆண்ட நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. 30 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பாஜகவும் ஆட்சிக்கு வந்துள்ளதால், என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் “ டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க இருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டன, குறிப்பாக பழைய வாகனங்களுக்கு தடை விதிப்பது, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தடைவிதிப்பது, அந்த வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விற்பனையை நிறுத்துவது, புகையைக் குறைக்கும் நடவடிக்கைகள், அரசு பேருந்து சேவையை பேட்டரியில் இயங்கும் பேருந்துகளாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் பெட்ரோல் நிலையங்களில் புதிய கருவி ஒன்றை பொருத்த இருக்கிறோம். இந்தக் கருவி பெட்ரோல் நிரப்பவரும் வாகனங்கள் 15 ஆண்டுக்கும் பழமையாக இருந்தால், அறிவிப்பு செய்யும். அந்த வாகனத்துக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது. எங்கள் முடிவையும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கும் தெரிவிப்போம்.
இதையும் படிங்க: வித்தியாசம் தெரியாத பாதரசம் - விஜயை வெளுத்து வாங்கிய கருணாஸ்...!

இந்த முடிவு மார்ச் 31ம் தேதிக்குப்பின் செயல்படுத்தப்படும். பெரிய கட்டிடங்களில் செயல்படும் ஓட்டல்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் புகையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆன்ட்டி ஸ்மோக் கன்களை பொருத்த வேண்டும், இவற்றைப் பொருத்தும்போது காற்று மாசின் அளவு குறையும். டெல்லியில் 90% அரசுப் பேருந்துகள் சிஎன்ஜி எரிபொருளுக்கு மாறிவிட்டன. 2025 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து சிஎன்ஜி பேருந்துகளும் மாற்றப்பட்டு பேட்டரியில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும். இவ்வாறு அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்றாம் உலக போரோடு விளையாடுறீங்க... ஜெலன்ஸ்கியை வெளிற வைத்த டிரம்ப்..!