டெல்லியில் மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட மிக காஸ்ட்லியான ஆண்ட்ராய்டு மட்டும் ஐபோன்களை பங்களாதேஷுக்கு போன்களை கடத்தும் கும்பலை வேட்டையாடி பிடித்து ஜெயிலில் அடைத்துள்ளது டெல்லி காவல்துறை.
டெல்லி காவல்துறையினர் 48 மொபைல் போன்களை பங்களாதேஷுக்கு கடத்த முயன்ற 24 வயது நபரான அப்துஷை கைது செய்ததன் மூலம் , சர்வதேச மொபைல் திருட்டு கும்பலை முறியடித்துள்ளது.

சலிம்கார் பைபாஸ் அருகே உளவுத்தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போன்களுடன் அவர் பிடிபட்டார். இது டெல்லி-என்.சி.ஆர், மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் வரை வருந்து விரிந்து கிடக்கும் குற்றச் சங்கிலியை தகர்த்தெறிந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டென்ஷன் கொடுத்த குரங்கு.. சமைத்து சாப்பிட்ட இருவர் கைது!
டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆதித்யா கவுதம் கூறுகையில், இந்தக் கும்பல் டெல்லி-என்.சி.ஆரில் மெட்ரோ நிலையங்கள், பேருந்துகள் மற்றும் நெரிசலான சந்தைகளில் பயணிகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. “திருடப்பட்ட போன்கள் விரைவாக டெல்லியை விட்டு வெளியேற்றப்படுவதால், சட்ட அமலாக்கத்தால் கண்காணிப்பது கடினமாகிறது,” என்றார்.

அப்துஷ் இந்த போன்களை உள்ளூர் திருடர்களிடம் ரூ.2,000-3,000க்கு வாங்கி, மேற்கு வங்கத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு புதுப்பிக்கப்பட்டு பங்களாதேஷில் ரூ.8,000-10,000க்கு விற்கப்பட்டதாக அவர் விளக்கினார். விசாரணையில், அப்துஷ் கடந்த 18 மாதங்களில் 800-க்கும் மேற்பட்ட திருட்டு போன்களை கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.
முதலில் பழைய பொருள் வியாபாரியாக இருந்த அவர், சமீர் மற்றும் சலீம் என்ற நபர்களால் இந்த சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டார். இவர்களது அடையாளங்கள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் சைபர் செல், அவரது கூட்டாளிகளைக் கண்டறிந்து, மாநில மற்றும் தேசிய எல்லைகளைத் தாண்டிய இந்த நெட்வொர்க்கை அழிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளது . “இது ஒரு சிக்கலான செயல்பாடு, ஒவ்வொரு இணைப்பையும் கண்டுபிடிப்போம்,” என்று காவல் ஆணையர் கவுதம் கூறினார்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை தவெகவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது..! நிர்வாகிகள் அதிருப்தி..!